தொழில் முனைவோர் சந்தை மாணவர்கள் அங்காடி அசத்தல்

UPDATED : பிப் 06, 2024 12:00 AM
ADDED : பிப் 06, 2024 09:36 AM
உடுமலை:
உடுமலையிலுள்ள மாவட்ட அரசு மாதிரி பள்ளியில் தொழில் முனைவோர் சந்தை கண்காட்சி நடந்தது.பள்ளி மாணவர்களிடம் உள்ள திறமைகளை வெளிப்படுத்தும் வகையில், பல்வேறு போட்டிகள் அரசு சார்பில் நடத்தப்படுகிறது. அவ்வகையில், உடுமலையில், மாவட்ட அரசு மாதிரி பள்ளியில் நடந்த தொழில் முனைவோர் சந்தை கண்காட்சியில், பள்ளி தலைமையாசிரியர் கணேஸ்வரி தலைமை வகித்தார்.ஆர்.கே.ஆர்., கல்வி குழும நிறுவனர் ராமசாமி, செயலாளர் கார்த்திக்குமார் முன்னிலை வகித்தனர். போஸ்டன் குரூப் ஆப் கம்பெனி உரிமையாளர் ராஜராஜன், வேலவா எக்ஸ்போர்ட்ஸ் நிறுவன மேலாளர் ஜெயக்குமார்ஸ்ரீநிவாசன் மாணவர்களுக்கு தொழில் முனைவது குறித்து விளக்கமளித்தனர்.மாணவர்களும், ஆர்வத்துடன் பங்கேற்று, தங்களின் திறன்களை பயன்படுத்தி அங்காடிகள் அமைத்தனர். சிறந்த அங்காடி அமைத்த மாணவர்களுக்கு, பள்ளி நிர்வாகத்தினர் பாராட்டு தெரிவிக்கப்பட்டதோடு, பரிசுகளும் வழங்கப்பட்டன.