கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க அழைப்பு

UPDATED : ஜன 25, 2024 12:00 AM
ADDED : ஜன 25, 2024 05:01 PM
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு மாவட்டத்தில், பள்ளிப்படிப்பு கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என, மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.இது குறித்து, கலெக்டர் ராகுல்நாத் அறிக்கை:
மத்திய அரசின் நிதி பங்களிப்புடன் செயல்படுத்தப்படும், பள்ளிப்படிப்பு கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ், அரசு பள்ளிகளில் 9 மற்றும் 10ம் வகுப்புகளில் பயிலும், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் பெண் குழந்தைகளுக்கு, கல்வி உதவித்தொகை வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.இத்திட்டன் கீழ் பயன்பெற, பெற்றோரின் உச்சகட்ட ஆண்டு வருமானம் 2.50 லட்சம் ரூபாய்க்குள் இருக்க வேண்டும். தகுதி உள்ள மாணவியருக்கு, ஆண்டுக்கு, 4,000 ரூபாய் கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் அல்லது அஞ்சல் வங்கிகளில், மாணவர்கள் பெயரில் வங்கி கணக்கு துவங்கி, ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும். ஜாதி, வருமானச் சான்றிதழ்களை பள்ளி தலைமையாசிரியர்களிடம் சமர்ப்பிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.