Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பார்வையற்ற மாணவருக்கு தங்குமிடம்; நேரு பல்கலைக்கு ஐகோர்ட் உத்தரவு

பார்வையற்ற மாணவருக்கு தங்குமிடம்; நேரு பல்கலைக்கு ஐகோர்ட் உத்தரவு

பார்வையற்ற மாணவருக்கு தங்குமிடம்; நேரு பல்கலைக்கு ஐகோர்ட் உத்தரவு

பார்வையற்ற மாணவருக்கு தங்குமிடம்; நேரு பல்கலைக்கு ஐகோர்ட் உத்தரவு

UPDATED : ஜன 25, 2024 12:00 AMADDED : ஜன 25, 2024 10:02 AM


Google News
புதுடில்லி:
ஜவஹர்லால் நேரு பல்கலை விடுதியில் இருந்து வெளியேற்றப்பட்ட பார்வையற்ற மாணவரிடம் கட்டணம் வசூலிக்காமல், பல்கலை வளாகத்தில் உள்ள அறையில் தங்க அனுமதிக்க வேண்டும் என டில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.புதுடில்லி ஜவஹர்லால் நேரு பல்கலையில் படிக்கும் சஞ்சீவ் குமார் மிஸ்ரா என்ற மாணவர் பார்வையற்றவர். விடுதியில் தங்கியிருந்த அவரை, பல்கலை நிர்வாகம் வெளியேற்றியது. அதை எதிர்த்து டில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கு கடந்த 4ம் தேதி, நீதிபதி ஹரிசங்கர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இரண்டாவது முதுகலை படிப்பை தொடரும் மாணவர்கள், விடுதியில் தங்க விதிமுறை இல்லை என பல்கலை சார்பில் வாதிடப்பட்டது.மாணவர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ராகுல் பஜாஜ், தனிப்பட்ட மாணவர்கள் பாதிக்கப்படக்கூடிய உடல் குறைபாடுகளை கவனத்தில் கொள்ளாமல், விதிமுறைகளை எல்லா வழக்குகளிலும் பயன்படுத்த முடியாது. பார்வையற்ற மாணவர் நுாலக பெஞ்சுகளில் துாங்குகிறார். பகலில் தங்க அவருக்கு இடமில்லை என வாதிட்டார்.பல்கலை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த வழக்கு விசாரணை முடியும் வரை மாணவர் தங்க இடவசதி செய்து தர பல்கலை தயாராக இருக்கிறது என்றார்.இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஹரிசங்கர், ஒரு வாரத்துக்குள் பதில் மனு தாக்கல் செய்ய பல்கலை நிர்வாகத்துக்கு உத்தரவிட்டு, 22ம் தேதிக்கு விசாரணையை ஒத்தி வைத்தார். ஆனால், கடந்த 22ம் தேதி நடந்த விசாரணைக்கு பல்கலை தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்படவில்லை.மாணவர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், &'பல்கலை வளாகத்தில் வழங்கப்பட்ட அறைக்கு ஒரு நாளைக்கு 100 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது&' என கூறப்பட்டு இருந்தது.இதையடுத்து, அடுத்த விசாரணை தேதி வரை மாணவர் சஞ்சீவ் குமார் மிஸ்ரா, அறையில் தங்கியிருக்க அனுமதிக்க வேண்டும். அதற்கு எந்தக் கட்டணமும் வசூலிக்கக் கூடாது என உத்தரவிட்ட நீதிபதி ஹரிசங்கர், விசாரணையை பிப். 12க்கு ஒத்தி வைத்தார்.




      Our Apps Available On




      Dinamalar

      Follow us