மாணவர்களுடன் கலந்துரையாடிய இஸ்ரோ முன்னாள் இயக்குனர்

UPDATED : ஜன 25, 2024 12:00 AM
ADDED : ஜன 25, 2024 09:56 AM
திருவொற்றியூர்:
திருவொற்றியூர், காலடிப்பேட்டையில் இயங்கி வரும் தனியார் பள்ளியில், நேற்று மதியம், ரோபோடிக் கண்காட்சி நடந்தது. இதில், இஸ்ரோ முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை பங்கேற்று, மாணவர்களின் படைப்புகளை பார்வையிட்டு கலந்துரையாடினார்.பின், அவர் கூறியதாவது:
ரோபோடிக் கண்காட்சியில், 15க்கும் மேற்பட்ட பள்ளிகள் பங்கேற்று, மாணவர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தியுள்ளனர். வருங்காலங்களில், பல்வேறு துறைகளில் இயந்திர மனிதன் பயன்படுத்தப்பட உள்ளது.மாணவர்கள் கல்லுாரி செல்வதற்கு முன்பாக, பள்ளிக் காலங்களில் நிச்சயம் இது குறித்து தெரிந்து கொள்ள வேண்டும். அதற்கான வாய்ப்புகளை நிச்சயம் பள்ளிகள் உருவாக்க வேண்டும்.மற்ற துறைகளைப் போல், அறிவியலிலும் வளர வேண்டும். அறிவியல் தான் பிற்காலம் என்பதை, மாணவர்கள் உணர வேண்டும். சந்திரயான் - 2 மற்றும் 3க்கும் இடையே பெரிய வித்தியாசம் இல்லை.பலமுறை சோதித்து, தவறுகள் திருத்தப்பட்டதால், சந்திரயான் - 3 வெற்றி பெற்றது. சூரிய புயல் புதிதல்ல; ஆனால், பாதிப்பு அதிகம் இருக்கும். அதன் மூலம், செயற்கைக் கோள்கள் பாதிக்கும். மனித அன்றாட நடைமுறை பாதிக்க நேரிடும். ஆதித்யா எல் - 1 ஆல், சூரிய புயலை முன் கூட்டியே தெரிவிக்க முடியும். அதன் வழியாக, செயற்கைக் கோள்களை பாதுகாக்க முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.