அந்தமானில் தமிழ் முதுகலை பட்டம்; துணை ஜனாதிபதியிடம் அமைச்சர் மனு

UPDATED : ஜன 13, 2024 12:00 AM
ADDED : ஜன 13, 2024 04:54 PM
வில்லியனுார்:
அந்தமான் கல்லுாரியில் தமிழில் முதுகலை பட்டம் பெற வழிவகை செய்யவேண்டும் என துணை ஜனாதிபதியிடம் அமைச்சர் சாய் சரவணன்குமார் கோரிக்கை மனு வழங்கினார்.புதுச்சேரி குடிமை பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் சாய் சரவணன்குமார் கடந்த மாதம் அரசு முறை பயணமாக அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுக்கு சென்றார். அங்குள்ள ஜவஹர்லால் நேரு ராஜ்கியை மஹா வித்யாலயா கல்லுாரியில் தமிழ் இளங்கலை பட்டம் பெறும் வசதி மட்டும் உள்ளதாகவும்.அதனை முதுகலை பட்டம் பெறுவதற்கான வசதிவாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கவேண்டும் என கல்லுாரி மாணவர்கள், பேராசிரியர்களும் அமைச்சரிடம் கோரிக்கை முன்வைத்தனர்.அதனை ஏற்று டில்லியில் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கரை நேரில் சந்தித்த அமைச்சர் சாய்சரவணன்குமார், அந்தமானில் தமிழ் முதுகலை பட்டம் பெறபாடத்திட்டத்தை கொண்டு வருமாறு வலியுறுத்தி கோரிக்கை மனு வழங்கினார்.