Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சர்வதேச வெப்ப பலுான் திருவிழா பொள்ளாச்சியில் துவக்கம்

சர்வதேச வெப்ப பலுான் திருவிழா பொள்ளாச்சியில் துவக்கம்

சர்வதேச வெப்ப பலுான் திருவிழா பொள்ளாச்சியில் துவக்கம்

சர்வதேச வெப்ப பலுான் திருவிழா பொள்ளாச்சியில் துவக்கம்

UPDATED : ஜன 13, 2024 12:00 AMADDED : ஜன 13, 2024 04:50 PM


Google News
பொள்ளாச்சி:
தமிழக சுற்றுலாத்துறை குளோபல் மீடியா பாக்ஸ் நிறுவனம் சார்பில் ஒன்பதாவது சர்வதேச வெப்ப பலுான் திருவிழா கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே ஆச்சிப்பட்டியில் நேற்று துவங்கியது.பிரான்ஸ் நெதர்லாந்து ஸ்பெயின் ஜப்பான் தாய்லாந்து வியட்நாம் உள்ளிட்ட எட்டு நாடுகளில் இருந்து 11 பலுான்கள் வந்துள்ளன. இந்த திருவிழா நேற்று முதல் துவங்கி வரும் 16ம் தேதி வரை நடக்கிறது.காலையில் வானில் வெப்ப பலுான் பறக்க விடப்படுகிறது. மாலையில் வெப்ப பலுான் நிலை நிறுத்தி காட்சிப்படுத்தப்படுகிறது. மேலும் மியூசிக் ஷோ குழந்தைகளுக்கான விளையாட்டுகளும் இடம் பெற்றுள்ளன. நேற்று மாலை நான்கு பலுான்கள் நிலை நிறுத்தப்பட்டு துவக்க விழா நடந்தது. இதை பொள்ளாச்சி மக்கள் கண்டு ரசித்தனர்.விழா ஒருங்கிணைப்பாளர்கள் கூறியதாவது:
பொள்ளாச்சியில் தொடர்ந்து இந்த திருவிழா ஒன்பதாவது ஆண்டாக நடத்தப்படுகிறது. நடப்பாண்டு குழந்தைகளை கவரும் வகையில் தவளை வாத்து யானை வடிவிலான மூன்று வெப்ப பலுான்கள் வந்துள்ளன.காலையில் 1000 அடி உயரம் வரை பறக்கலாம்; ஆனால் 500 அடி உயரம் வரை மட்டுமே பறக்கவிடப்படும். காற்றின் வேகத்துக்கு ஏற்ப குறிப்பிட்ட தொலைவுக்கு பறக்க விடப்படும். மாலையில் 80 அடி உயரத்தில் பலுான் நிலை நிறுத்தப்படும்.இதுதவிர வரும் 14ம் தேதி மராத்தான் போட்டி நடக்கிறது. 3 5 மற்றும் 10 கி.மீ. என மூன்று பிரிவுகளாக மராத்தான் போட்டி நடத்தப்படுகிறது. இந்த மூன்று பிரிவுகளில் முதலிடம் பிடிப்போர் பலுானில் பறக்க வாய்ப்பு அளிக்கப்படுகிறது.ஒவ்வொரு நாளும் குழந்தைகள் முதல் அனைவரையும் கவரும் வகையில் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இது தவிர தினமும் காலை 10:00 முதல் மாலை 4:30 மணி வரை ஹெலிகாப்டர் ரெய்டு நடக்கிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.




      Our Apps Available On




      Dinamalar

      Follow us