பள்ளி, கல்லுாரிகளில் களைகட்டிய பொங்கல் விழா பொங்கிய உற்சாகம்!

UPDATED : ஜன 13, 2024 12:00 AM
ADDED : ஜன 13, 2024 04:47 PM
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்திலுள்ள கல்லுாரிகள், பள்ளிகளில் பொங்கல் கொண்டாட்டம் களை கட்டியது. மாணவ, மாணவியர் பராம்பரிய முறையில் உடையணிந்து, விழாவை குதுாகலமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.திருப்பூர், முதலிபாளையம் நிப்ட்-டீ கல்லுாரியில், தை பொங்கல் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. பறை இசை, வண்ணமயில் காவடி, சாமளாபுரம் இசை கலைஞர்களின் இன்னிசை நிகழ்ச்சியுடன் விழா துவங்கியது.காங்கயம் காளைகள் பூட்டிய வண்டிகளில், ரேக்ளா ரேஸ், பாரம்பரிய நடனம், கயிறு இழுத்தல், சாக்கு மாட்டி ஓட்டம், கோலப்போட்டி என பல போட்டிகள் நடந்தது. கல்லுாரி முதன்மை ஆலோசகர் ராஜா சண்முகம், கல்லுாரியின் தலைவர் மோகன், கல்லுாரி முதல்வர் பாலகிருஷ்ணன் போட்டிகளில் பங்கேற்றவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டினர்.இசை கலைஞர் மற்றும் காங்கயம் காளையின் உரிமையாளர்கள், நினைவு பரிசு வழங்கி, கவுரவிக்கப்பட்டனர். தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையை நினைவு கூறும் வகையில், மாணவ, மாணவியர் பாரம்பரிய ஆடை அணிந்து விழாவை கொண்டாடி மகிழ்ந்தனர்.குமரன் கல்லுாரி
திருப்பூர் குமரன் மகளிர் கல்லுாரியில் பொங்கல் விழா நேற்று கொண்டாடப்பட்டது. மாணவியர் பாரம்பரிய உடையில் பங்கேற்றனர். புதுப்பானை, செங்கரும்பு, மஞ்சள், பச்சரிசி, மண்டை வெல்லம் சகிதமாக மாணவியர் புத்தாடைகளுடன் ஆஜராகினர். கல்லுாரி முதல்வர் வசந்தி தலைமை வகித்து, விழாவை துவக்கி வைத்தார். கல்லுாரி நிர்வாக அலுவலர் நிர்மல்ராஜ் ஒருங்கிணைத்தார்.கல்லுாரி மாணவியர் பேரவை தலைவர் ஹேமலதா தலைமையில் மாணவியர் பல்வேறு குழுக்களாக பிரிந்து, பாட்டுக்கு, நடனமாடினர். முன்னதாக கல்லுாரி வளாகத்திலுள்ள ஞானவிநாயகருக்கு பொங்கல் படையலிட்டனர். பொங்கலை அனைவருக்கும் வழங்கி, வாழ்த்துக்களை பரிமாறினர். முன்னதாக, கலைநிகழ்ச்சி, விளையாட்டு போட்டிகளில், மாணவியர் உற்சாகத்துடன் பங்கேற்றனர்.சமத்துவ பொங்கல்
திருப்பூர் மாநகராட்சி, 42வது வார்டுக்கு உட்பட்ட, பாரப்பாளையம் பள்ளியில், சமத்துவ பொங்கல் விழா நேற்று நடந்தது. பள்ளி, மாணவியர் அழகிய வண்ண கோலமிட்டு அலங்கரித்திருந்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் அருணா, மாநகராட்சி எதிர்க்கட்சி கவுன்சிலர் குழு தலைவர் அன்பகம் திருப்பதி முன்னிலையில், பொங்கல் வைத்து, சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. பொங்கல் விழா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசு வழங்கப்பட்டது.