விவேகானந்தர் பிறந்த நாள் விழா நினைவு ஸ்துாபியில் மலரஞ்சலி

UPDATED : ஜன 13, 2024 12:00 AM
ADDED : ஜன 13, 2024 11:37 AM
ராமநாதபுரம்:
சுவாமி விவேகானந்தர் பிறந்த நாளான தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு ராமநாதபுரத்தில் உள்ள அவரது நினைவு ஸ்துாபியில் மாணவர்கள், பொதுமக்கள் மலர் துாவி மரியாதை செய்தனர்.சுவாமி விவேகானந்தர்1897ல் அமெரிக்கா சென்று உலகத் தமிழ் மாநாட்டில்பங்கேற்று தாயகம் திரும்பிய பிறகு முதன் முதலாக ராமநாதபுரத்தில் கேணிக்கரையில் பேசினார். இவ்விடத்தில் அவரது நினைவாக ஸ்துாபி அமைத்து வாரந்தோறும் வழிபாடு நடக்கிறது.நேற்று சுவாமி விவேகானந்தரின் 161வது பிறந்த நாளான தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு வார வழிபாட்டு குழு சார்பில் ஸ்துாபியில் மலர் துாவி வழிபட்டனர். பள்ளி மாணவர்களுக்கு நோட்டுப்புத்தகம் வழங்கினர். காலண்டர், அன்னதானம் வழங்கப்பட்டது.பா.ஜ., மாவட்டத் தலைவர் தரணி முருகேசன், செயற்குழு உறுப்பினர் வீரபாகு, ஆத்மா கார்த்திக், இளைஞரணிமாவட்ட துணைத் தலைவர் வினோத், நகர பொதுச்செயலாளர் பாக்கியராஜ், ஞானதீப சேவா சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.வார வழிபாட்டு மன்ற ஒருங்கிணைப்பாளரான ஹிந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர் கண்ணதாசன் ஏற்பாடுகளை செய்திருந்தார்.