தேசிய வினாடி- வினா, பிராஜெக்ட் எக்ஸ்: மாணவர்கள் அசத்தல்

UPDATED : ஜன 13, 2024 12:00 AM
ADDED : ஜன 13, 2024 11:01 AM
சென்னை:
சென்னை வினாடி- வினா மற்றும் பிராஜெக் எக்ஸ் போட்டிகளில், சென்னை மற்றும் நெல்லை மாணவர்கள் முதலிடங்களை பிடித்து அசத்தினர்.ஷிவ் நாடார் பல்கலையின், தேசிய அளவிலான கல்வி விழா சென்னையில் உள்ள பல்கலை வளாகத்தில் நடந்தது. இதில், வினாடி- வினா மற்றும் பிராஜெக்ட்ஸ் எக்ஸ் என்ற போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், தமிழகம், புதுச்சேரி, பஞ்சாப் உட்பட பல்வேறு மாநிலகளில் இருந்து, ஏராளமான மாணவ, மாணவியர் பங்கேற்று திறமையயை வெளிப்படுத்தினர்.இதில், பிராஜெக்ட் எக்ஸ் போட்டியில், நெல்லை புஷ்பலதா மெட்ரிக் பள்ளியை சேர்ந்த எஸ்.நரேன் ராஜசேகர், எம்.செந்தில் குமார், எம்.விஷால் ஆகியோர் வெற்றி பெற்று தலா 25 ஆயிரம் ரொக்க பரிசை வென்றனர்.அவர்களை தொடர்ந்து, ஜெய்ப்பூர் ஜெய்ஸ்ரீ பெரிவால் பள்ளியின் அக்ஷ் கர்க், பாஸ்கர் சிங் இரண்டாமிடத்தையும், கோவை மங்சள் ரயில் பள்ளியின் அத்வைத் கவுசிக் மற்றும் யுவன் மூன்றாம் இடங்களை வென்றனர்.வினாடி வினா போட்டி, சென்னை, புதுச்சேரி உட்பட 12 இடங்களில் நடந்தது. இதில், சென்னை கே.கே.நகர் பி.எஸ்.பி.பி., பள்ளியின் ஆர்.ஷியாம் சுந்தர், அர்ஜூன் வைத்தியநாதன், தலா 25 ஆயிரம் வென்றனர். பி.எஸ்.பி.பி., மில்லினியம் கேவையை சேரந்த விஷ்ருத் முரளிதரன் மற்றும் அஷ்வின் ஆகியோர் இரண்டாமிடமும், வித்யா நிகேதன் கோவையை சேர்ந்த ககன் ஜி தும்கூர் மற்றும் அதுலிதன் மூன்றாம் இடங்களை வென்றனர்.