Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தமிழ் வளர்ச்சி துறை சார்பில் பள்ளி அளவிலான போட்டி

தமிழ் வளர்ச்சி துறை சார்பில் பள்ளி அளவிலான போட்டி

தமிழ் வளர்ச்சி துறை சார்பில் பள்ளி அளவிலான போட்டி

தமிழ் வளர்ச்சி துறை சார்பில் பள்ளி அளவிலான போட்டி

UPDATED : ஜன 11, 2024 12:00 AMADDED : ஜன 11, 2024 09:28 AM


Google News
ஈரோடு:
மாணவர்களின் படைப்பாற்றல், பேச்சாற்றலை வளர்க்க, தமிழ் வளர்ச்சி துறையால் பள்ளி மாணவ, மாணவியருக்கு கவிதை, கட்டுரை, பேச்சு போட்டிகள் நடத்தப்படுகிறது.இதன்படி, ஈரோடு மாவட்ட பள்ளி அளவிலான கவிதை, கட்டுரை, பேச்சு போட்டிகள் ஈரோட்டில் நடந்தது. நடுவர்களாக ஆசிரியர்கள் நளினா, நா.ப.நாகராஜ், உ.கந்தசாமி, வெ.நாகராஜ், கருப்புசாமி, சு.கந்தசாமி, காயத்ரிதேவி, துரைராஜ், கலைசெல்வன் ஆகியோர் செயல்பட்டனர்.கவிதை போட்டியில், பெருந்துறை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி இரா.பவித்ரா, வீரப்பன்சத்திரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி நவீன், வீரப்பன்சத்திரம் மாசிமலை ரங்கசாமி கவுண்டர் அரசு மேல்நிலைப்பள்ளி சுதா ஆகியோர் முதல், 3 பரிசுக்கான, 10,000, 7,000, 5,000 ரூபாய் பரிசு பெற்றனர்.கட்டுரை போட்டியில் கல்யாணி புரம் பி.கே.பி.சாமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி கமலி, நம்பியூர் குமுதா பதின்ம மேல்நிலைப்பள்ளி மகாசாரதி, சீனாபுரம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி சிவரஞ்சனி ஆகியோர் முதல், 3 பரிசுக்கான, 10,000, 7,000, 5,000 ரூபாய் பரிசு பெற்றனர். பேச்சு போட்டியில் வீரப்பன்சத்திரம் மா.ர.க.அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி நந்தினி, ஈரோடு கலைமகள் கல்வி நிலையம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி நித்யஸ்ரீ, சத்தியமங்கலம் அரசு மகளிர் மாதிரி மேல்நிலைப்பள்ளி சுஜித்ரா ஆகியோர் முதல், 3 பரிசுக்கான, 10,000, 7,000, 5,000 ரூபாய் பரிசு பெற்றனர்.




      Our Apps Available On




      Dinamalar

      Follow us