தொடர்ந்து 36 மணி நேரம் பணி முதுநிலை டாக்டர்கள் வேதனை

UPDATED : ஜன 07, 2024 12:00 AM
ADDED : ஜன 07, 2024 04:59 PM
சென்னை:
வார விடுப்பு வழங்காமல், தொடர்ந்து, 36 மணி நேரம் பணியாற்ற அழுத்தம் தருவதால், மன உளைச்சலுக்கு உள்ளாகி இருப்பதாக, முதுநிலை மருத்துவ மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.முதுநிலை மருத்துவ மாணவர்கள் சிலர் தற்கொலை செய்ததை தொடர்ந்து, தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்கம் சார்பில், மாணவர்கள் மத்தியில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. சென்னை மருத்துவ கல்லுாரி, ஸ்டான்லி, கீழ்ப்பாக்கம் உள்ளிட்ட, 20க்கும் மேற்பட்ட மருத்துவ கல்லுாரிகளில் படிக்கும் முதுநிலை மருத்துவ மாணவர்களிடம் குறைகள் கேட்கப்பட்டுள்ளன.அதில், சென்னை மருத்துவ கல்லுாரியை சேர்ந்த சில மாணவர்கள், தங்களுக்கு வாரத்துக்கு இருமுறை, 24 மணி நேர தொடர் பணி வழங்கப்படுவதாக குற்றம் சாட்டியுள்ளனர். இதுதவிர, நிர்வாக பணிகளிலும் தங்களை ஈடுபடுத்துவதாக தெரிவித்துள்ளனர்.மதுரை மருத்துவ கல்லுாரியில் தொடர்ந்து, 36 மணி நேரம் வரை பணி நீட்டிக்கப்படுவதால், மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகி இருப்பதாக, மாணவர்கள் புகார் கூறியுள்ளனர். அதேபோல, முதுநிலை மருத்துவ மாணவர்கள் பலர், தொடர்ந்து வார விடுப்பு இல்லாமலும், ஓய்வு இல்லாமலும் பணியாற்றுவதும் தெரியவந்துள்ளது.இதுகுறித்த அறிக்கையை, மக்கள் நல்வாழ்வு துறை செயலர் ககன்தீப் சிங் பேடி, மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குனர் சங்குமணி ஆகியோரிடம் அளிக்க உள்ளதாக, மருத்துவ அலுவலர் சங்கத்தினர் கூறியுள்ளனர்.