Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தள்ளாடும் தஞ்சை சரஸ்வதி மஹால் நுாலகம்!

தள்ளாடும் தஞ்சை சரஸ்வதி மஹால் நுாலகம்!

தள்ளாடும் தஞ்சை சரஸ்வதி மஹால் நுாலகம்!

தள்ளாடும் தஞ்சை சரஸ்வதி மஹால் நுாலகம்!

UPDATED : ஜன 07, 2024 12:00 AMADDED : ஜன 07, 2024 04:55 PM


Google News
தஞ்சாவூர்:
நிதி மற்றும் ஆள் பற்றாக்குறையால், சென்னை புத்தக கண்காட்சியில் அரங்கம் அமைக்க முடியாத நிலையில் தஞ்சை சரஸ்வதி மஹால் நுாலகம் தடுமாறி வருகிறது.ஆசியாவின் மிக பழமையான நுாலகங்களுள், தஞ்சாவூர், சரஸ்வதி மஹால் நுாலகமும் ஒன்று. இந்த நுாலகத்தில் முழு நேர இயக்குனர் பதவி, 32 ஆண்டுகளாக காலியாக உள்ளது. கலெக்டர் தான், இயக்குனர் பதவியை கூடுதலாக கவனிக்கிறார்.கடந்த, 2017ல் பள்ளி கல்வித்துறைக்கு நிர்வாகம் மாற்றப்பட்ட நிலையில், நுாலக நிர்வாக அலுவலராக முதன்மை கல்வி அலுவலர் நிலையில் நியமிக்கப்பட்டாலும், முழு அதிகாரம் இல்லாததால் பிரச்னை உருவாகி வருகிறது.ஓய்வூதியத்துக்கு மாதம், 7 லட்சம் ரூபாயும், ஊழியர்களுக்கு மாத சம்பளம், 12 லட்சம் ரூபாயும் செலவாகும் நிலையில், தமிழக அரசு, ஆண்டுக்கு, 75 லட்சம் ரூபாய் வழங்குவது போதுமானதாக இல்லாமல், நுாலக நிர்வாகம், ஓராண்டாக நிதி பற்றாக்குறையில் உள்ளது.மத்திய அரசு வழங்கும் நிதிக்கு முறையாக கணக்கு இல்லாமல் இருப்பதால், நிதி பெறுவதில் சிக்கல் நீடித்து வருவதாக கூறப்படுகிறது. நுாலகத்தில், 48 பேர் நிரந்தர ஊழியர்களாக பணியாற்றிய நிலையில், தற்போது, 19 பேர் மட்டுமே பணியாற்றி வருகின்றனர். தற்காலிக பணியாளர்கள், 18 பேர் இருந்த நிலையில், அவர்களும் சில மாதங்களாக நிறுத்தப்பட்டு விட்டனர்.இந்நிலையில், தமிழகத்தில் புத்தக கண்காட்சி எங்கு நடத்தாலும், சரஸ்வதி மஹால் சார்பில், ஒரு அரங்கம் அமைக்கப்பட்டு வந்தது. இச்சூழலில், கடந்த 3ம் தேதி, சென்னையில் துவங்கிய புத்தக கண்காட்சியில், 480 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.ஆனால், நிதி, ஆள் பற்றாக்குறையால் சரஸ்வதி மஹால் நுாலகம் சார்பில், புத்தக கண்காட்சியில் ஒரு அரங்கம் கூட அமைக்கப்படவில்லை என்பது கல்வி ஆய்வாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.தஞ்சாவூர் மாவட்ட மக்கள் நல பேரவை ஆலோசகரும், கல்வி ஆய்வாளருமான ஜீவக்குமார் கூறியதாவது:
முதல்வராக ஸ்டாலின் இங்கு ஆய்வு செய்து, நுாலகத்தின் பெருமைகளை அறிந்து, தேவையான உதவிகள் செய்வதாக கூறினார். பள்ளி கல்வித்துறை அமைச்சரும், நுாலக தலைவருமான மகேஷ் ஓரிரு முறை ஆய்வு செய்து, உரிய நடவடிக்கைகள் எடுப்பதாக உறுதியளித்தார்.ஆனாலும், தற்போது வரை, நுாலத்தில் நிதி மற்றும் ஆள் பற்றாக்குறை அதிகரித்து வருவதை அரசு கண்டுகொள்ளாமல் உள்ளது. இதனால், நுாலகத்தில் புதிய நுால்கள் அச்சடிப்பு, மறுப்பதிப்பு உருவாக்கம் போன்ற பணிகள் நடைபெறவில்லை.கடந்த, 2016ல் நுாலகத்தின் பெருமையை போற்றும் விதமாகவும், நுால் விற்பனை, புத்தக கண்காட்சிகளுக்கு நுால்களை கொண்டு செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட வாகனமும் பயன் இல்லாமல் உள்ளது.புத்தக கண்காட்சிகளில் லட்சக்கணக்கில் நுால்கள் விற்பனையாகும் சரஸ்வதி மஹால் நுால்கள், இந்த ஆண்டு சென்னை புத்தக கண்காட்சியில் ஒரு அரங்கம் கூட அமைக்காதது, நுாலக நிர்வாகத்தின் சரிவை காட்டுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.




      Our Apps Available On




      Dinamalar

      Follow us