Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பேராசிரியர் பணியிடம் நிரப்ப வலியுறுத்தி மாணவர்கள் கையெழுத்து இயக்கம்

பேராசிரியர் பணியிடம் நிரப்ப வலியுறுத்தி மாணவர்கள் கையெழுத்து இயக்கம்

பேராசிரியர் பணியிடம் நிரப்ப வலியுறுத்தி மாணவர்கள் கையெழுத்து இயக்கம்

பேராசிரியர் பணியிடம் நிரப்ப வலியுறுத்தி மாணவர்கள் கையெழுத்து இயக்கம்

UPDATED : ஜன 07, 2024 12:00 AMADDED : ஜன 07, 2024 10:35 AM


Google News
பரமக்குடி:
அரசு கலைக் கல்லுாரிகளில் பேராசிரியர் பணியிடம் காலியாக உள்ளதை நிரப்ப வலியுறுத்தி பரமக்குடி அரசு கலைக்கல்லுாரியில் மாணவர்களின் கையெழுத்து இயக்கம் நடத்தினர்.தமிழ்நாட்டில் கடந்த 8 ஆண்டுகளாக 170 அரசு கலைக் கல்லுாரிகளில் 4,000 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால் ஏழை மாணவர்களின் உயர்கல்வி பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.கடந்த 2 ஆண்டுகளில் 20 புதிய அரசு கலைக் கல்லுாரிகள் துவங்கப்பட்டுள்ளன. ஆகவே பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி பரமக்குடியில் உள்ள 12 துறை மாணவர்கள் கையெழுத்திட்டனர். இவற்றை உயர்கல்வி அமைச்சர், முதன்மை செயலர், இயக்குனருக்கு அனுப்பி வைக்க உள்ளனர்.இதில் ராமநாதபுரம் சிவகங்கை மண்டல செயலாளர் விஜயகுமார், கிளை பொருளாளர் பிரசாத், மின்னணுவியல் இணை பேராசிரியர் சிவகுமார் உட்பட பேராசிரியர்கள் கணேசன், அறிவழகன், கண்ணன் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.




      Our Apps Available On




      Dinamalar

      Follow us