சென்னையில் இந்த 4 சனிக்கிழமைகளில் பள்ளி வேலைநாள் அறிவிப்பு

UPDATED : ஜன 05, 2024 12:00 AM
ADDED : ஜன 05, 2024 05:46 PM
சென்னை:
சென்னையில் மிக்ஜாம் புயல், வெள்ளதால் விடுமுறை விடப்பட்ட நிலையில் அதனை ஈடுசெய்ய 4 சனிக்கிழமைகளில் முழு வேலை நாளாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார்.சென்னையில் சமீபத்தில் தாக்கிய மிக்ஜாம் புயலால், பல இடங்களில் வெள்ளநீர் சூழ்ந்திருந்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பள்ளி, கல்லூரிகளுக்கும் தொடர்ந்து விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக 4 சனிக்கிழமைகளில் வேலை நாளாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார்.அதன்படி, வரும் ஜன.,6 (நாளை), ஜன.,20, பிப்.,3, பிப்.,17 ஆகிய 4 சனிக்கிழமைகளில் முழு பணிநாளாக பள்ளிகள் செயல்படும் என பள்ளி தலைமையாசிரியர்கள், முதல்வர்களுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவுறுத்தியுள்ளார்.