UPDATED : ஜன 05, 2024 12:00 AM
ADDED : ஜன 05, 2024 02:59 PM
போதிய தூக்கம் இல்லாதவர்களுக்கு உயர்ந்த இரத்த அழுத்தம் உட்பட பல்வேறு ஆரோக்கிய சீர்கேடு ஏற்படுவதாக ஒரு ஆய்வு கண்டறிந்துள்ளது.ஜப்பானில் உள்ள சுகுபா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், ஐந்து இரவுகளுக்கான தூக்கத்தின் தரத்தை மதிப்பிடுவதற்கு எலக்ட்ரோ என்செபலோ கிராம் - இ.இ.ஜி., அளவீடுகளைப் பயன்படுத்தி 30-59 வயதுடைய 100 நபர்களிடம் ஒரு விரிவான ஆய்வை நடத்தினர். எலக்ட்ரோ என்செபலோ கிராபி என்பது மூளையின் தன்னிச்சையான மின் செயல்பாட்டின் எலக்ட்ரோகிராம் பதிவு செய்வதற்கான ஒரு முறையாகும். தூக்கத்தின் தரம் என்பது மொத்த உறக்க கால அளவு மட்டுமல்ல, வெவ்வேறு உறக்க நிலைகளின் அளவு, விழித்திருக்கும் கால அளவு மற்றும் விழிப்புகளின் அதிர்வெண் ஆகியவற்றையும் கொண்டுள்ளது என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.