UPDATED : ஜன 05, 2024 12:00 AM
ADDED : ஜன 05, 2024 02:26 PM
பெங்களூரு:
அங்கன்வாடி சிறார்களுக்கு அளிக்கப்படும் உணவு வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஊட்டச்சத்து பற்றாக்குறையைப் போக்கும் நோக்கில் கூடுதல் கோதுமை லட்டு, சிறு தானிய லட்டு, புதிய தின்பண்டங்கள் வழங்க, அரசு திட்டமிட்டுள்ளது.இதுகுறித்து, மகளிர், குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
அங்கன்வாடி சிறார்களின் ஊட்டச்சத்து பற்றாக்குறையை போக்கும் வகையில் உணவு வகைகளை மாற்றும்படி, கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது. இதன்படி, அங்கன்வாடி மையங்களில் சிறார்களுக்கு வழங்கப்படும் உணவு மெனுவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.தற்போது சாதம் சாம்பார், சாதம் கிச்சடி, உப்புமா வழங்கப்படுகிறது. இனி கூடுதலாக 25 கிராம் எடையுள்ள கோதுமை லட்டு, சிறு தானிய லட்டு வழங்கப்படும். ஆறு மாதம் முதல் மூன்று வயது வரையிலான குழந்தைகளுக்கு, வீட்டிலேயே ஊட்ட வசதியாக வெல்லம் கலக்காத, வெல்லம் கலந்த இனிப்பு தின்பண்டங்கள் வழங்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.