திருப்புதல் தேர்வு; வரும் 5ல் துவக்கம்
திருப்புதல் தேர்வு; வரும் 5ல் துவக்கம்
திருப்புதல் தேர்வு; வரும் 5ல் துவக்கம்
UPDATED : ஜன 04, 2024 12:00 AM
ADDED : ஜன 04, 2024 05:38 PM
உடுமலை:
உடுமலை மற்றும் சுற்றுப்பகுதி அரசு பள்ளிகளில், பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, வரும் 5ம் தேதி முதல் திருப்புதல் தேர்வு நடத்தப்படுகிறது.உடுமலை மற்றும் சுற்றுப்பகுதி அரசு பள்ளிகளில், பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கான பாடத்திட்டங்கள், பெருமளவு முழுமை பெற்றுள்ளன. மாணவர்களை, பொதுத் தேர்வுக்கு தயார்படுத்தும் வகையில், பள்ளி அளவில் அலகுத் தேர்வும் நடத்தி பயிற்சி அளிக்கப்படுகிறது.இந்நிலையில், மாணவ, மாணவியரை முழுமையாக பொதுத்தேர்வுக்கு தயார்படுத்தும் வகையில், நடப்பாண்டிற்கான திருப்புதல் தேர்வு, வரும், 5ல் துவங்குகிறது. அதன்படி, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 திருப்புதல் தேர்வு வரும், 5 முதல் 12ம் தேதி வரையும், 10ம் வகுப்பு மாணவர்களுக்கான திருப்புதல் தேர்வு, வரும் 8 முதல் 12ம் தேதி வரையும் நடத்தப்படுகிறது.இந்த தேர்வு, பொதுத்தேர்வின் மாதிரி வடிவில் நடத்தப்படுகிறது. இதற்காக, மாவட்ட அளவில் வினாத்தாள் தயாரிக்கப்பட்டு பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்படவும் உள்ளது. கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், திருப்புதல் தேர்வு, மதியம், 1:30 மணிக்கு துவங்கி, மாலை, 4:45 மணி வரை நடத்தப்படும். தேர்வு இல்லாத வேளைகளில், மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வுக்கு வகுப்புகள் நடத்தப்படும், என்றனர்.