திருக்குறள் பேச்சு போட்டி; பள்ளி மாணவர்கள் சாதனை

UPDATED : ஜன 04, 2024 12:00 AM
ADDED : ஜன 04, 2024 05:35 PM
கோவை:
ஸ்ரீராம் இலக்கியக் கழகம் சார்பில், பள்ளி மாணவர்களுக்கான திருக்குறள் பேச்சுப் போட்டி நடந்தது.சென்னை, புதுச்சேரி, கோவை, நெல்லை, மதுரை, திருவாரூர், திருச்சி, உள்ளிட்ட 12 மாவட்டங்களை சேர்ந்த பள்ளி மாணவர்களுக்கு, பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன.இறுதி போட்டியில், மேட்டுப்பாளையம், கல்லாறு, சச்சிதானந்த ஜோதி நிகேதன் சர்வதேச பள்ளி மாணவர் அகில், மாநில அளவில் இரண்டாம் இடம் பெற்று, சாதனை படைத்துள்ளார். மாணவி, தேஷ்னா ஊக்கப்பரிசினை பெற்றார். தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக சச்சிதானந்த ஜோதி நிகேதன் பள்ளி மாணவர்கள், இறுதிபோட்டிகளில் வென்று வருகின்றனர்.வெற்றி பெற்ற மாணவர்களை, பள்ளியின் நிர்வாக அறங்காவலர் ராமசாமி, செயலாளர் கவிதாசன், கல்வி ஆலோசகர் கணேசன், முதல்வர் உமாமகேஸ்வரி, துணை முதல்வர் சக்திவேல் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.