போக்சோ வழக்கு விசாரணை துரிதப்படுத்த வேண்டுகோள்

UPDATED : ஜன 04, 2024 12:00 AM
ADDED : ஜன 04, 2024 10:23 AM
கோவை:
பள்ளி மாணவி அளித்த புகாரின் பேரில், பதியப்பட்ட போக்சோ வழக்கு விசாரணையை துரிதப்படுத்த கோரி, கலை ஆசிரியர்கள் நலச்சங்க மாநில தலைவர் ராஜ்குமார், தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில், புகார் மனு அளித்துள்ளார்.மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது:
தொண்டாமுத்துார் வட்டாரத்திற்குட்பட்ட பள்ளி ஒன்றில், தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த மாணவிக்கு, பாலியல் தொந்தரவு அளித்ததாக, சமீபத்தில் உடற்கல்வி ஆசிரியர் ஆனந்தகுமார் கைது செய்யப்பட்டார்.மாணவி கொடுத்த புகார் அடிப்படையில், மேலும் 12 ஆசிரியர்களுக்கு, போலீசார் சம்மன் அனுப்பினர். இந்த வழக்கு விசாரணையை துரிதப்படுத்தி, விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும்.பாதிக்கப்பட்ட மாணவி, கடந்தாண்டு ஏப்ரல் மாதமே புகார் அளித்தும், நடவடிக்கை எடுக்காத தலைமையாசிரியை மீது, பள்ளிக்கல்வி கமிஷனர் தலைமையில் விசாரணை நடத்த வேண்டும். மாணவியின் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.