ஐ.ஐ.டி.,யில் சாஸ்த்ரா விழா 110 நிகழ்வுகளுக்கு ஏற்பாடு

UPDATED : ஜன 04, 2024 12:00 AM
ADDED : ஜன 04, 2024 10:08 AM
சென்னை:
சென்னை ஐ.ஐ.டி., மாணவ, மாணவியர் சார்பில், 25ம் ஆண்டாக நேற்று, சாஸ்த்ரா தொழில்நுட்ப விழா துவங்கியது. வரும் 7ம் தேதி வரை, 110 நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக, ஐ.ஐ.டி., இயக்குனர் காமகோடி அறிவித்து உள்ளார்.அவர் கூறியதாவது:
கடந்த, 25 ஆண்டுகால புதுமையான அம்சங்கள், இந்த விழாவில் இடம் பெறும். இதன் ஒரு அம்சமான விரிவுரை தொடரில், முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று உரையாற்றுகிறார்.தமிழக தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், புதுச்சேரி முன்னாள் துணை நிலை கவர்னர் கிரண்பெடி மற்றும் புகழ்பெற்ற பேச்சாளர்கள் பங்கேற்கின்றனர். வரும், 6ம் தேதி சைபர் பாதுகாப்பு குறித்த நிகழ்ச்சியும், 7ல், தொழில்நுட்ப மற்றும் பொழுதுபோக்கு அம்சம் இணைந்த நிகழ்ச்சியும் நடக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.நிகழ்ச்சி குறித்த முழு விபரங்களை, https://shaastra.org/ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.