UPDATED : ஜன 04, 2024 12:00 AM
ADDED : ஜன 04, 2024 10:04 AM
காஞ்சிபுரம்:
கலாம் யுவி அறக்கட்டளையின் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில், கடந்த ஆண்டு மார்ச் முதல் அரசு பள்ளி மாணவர்களுக்கு இணைய வழியாக திருக்குறள் வகுப்பு நடத்தப்பட்டது.இதை தொடர்ந்து, 133 அரசு பள்ளி மாணவர்கள், 133 திருக்குறளை, 13 நிமிடத்தில், 133 ஆசிரியர்கள் முன்னிலையில் முற்றோதல் செய்யும் நிகழ்ச்சி காஞ்சிபுரத்தில் நேற்று முன்தினம் நடந்தது.இதில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு தொடக்கம், நடுநிலை, உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் திருக்குறள் உலக சாதனை நிகழ்வில் பங்கேற்று திருக்குறள் ஒப்புவித்தனர்.