செங்கை புத்தக கண்காட்சி மாணவர்களுக்கு டோக்கன்

UPDATED : ஜன 04, 2024 12:00 AM
ADDED : ஜன 04, 2024 10:02 AM
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு மாவட்டத்தில், மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம், செங்கை பாரதியார் மன்றம் இணைந்து, ஐந்தாவது ஆண்டாக புத்தக திருவிழா நடத்தி வருகிறது.அரசு பள்ளி மாணவர்களை புத்தக திருவிழாவிற்கு பேருந்துகளில் அழைத்து வர, செங்கல்பட்டு வட்டார போக்குவரத்து நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது. இந்த வாகனங்களில், அரசு பள்ளி மாணவர்கள், நேற்று ஏராளமானோர் வந்தனர். இவர்களுக்கு, நுாறு ரூபாய் மதிப்புள்ள டோக்கன் வழங்கப்பட்டு, அவர்கள் விரும்பிய புத்தகங்களை வாங்கிக்கொள்ள வழிவகை செய்யப்பட்டது.நேற்று, ஏழாம் நாள் புத்தக திருவிழா, முதன்மை கல்வி அலுவலர் கற்பகம் தலைமையில் நடந்தது. பட்டிமன்ற நடுவர் சுகி.சிவம், தொடக்க கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் ஆகியோர் பேசினர்.இன்று, எட்டாம் நாள் விழாவிற்கு, தாம்பரம் மாநகர காவல் துறை கூடுதல் இயக்குனர் அமல்ராஜ் தலைமை ஏற்கிறார். இலக்கியத்தில் நீதி&' என்ற தலைப்பில், முன்னாள் தலைமை செயலர் இறையன்பு பேசுகிறார்.