Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அரசு பள்ளியில் ஹிந்தி வேண்டும்; கோரிக்கை அட்டையுடன் சிறுமி

அரசு பள்ளியில் ஹிந்தி வேண்டும்; கோரிக்கை அட்டையுடன் சிறுமி

அரசு பள்ளியில் ஹிந்தி வேண்டும்; கோரிக்கை அட்டையுடன் சிறுமி

அரசு பள்ளியில் ஹிந்தி வேண்டும்; கோரிக்கை அட்டையுடன் சிறுமி

UPDATED : ஜன 03, 2024 12:00 AMADDED : ஜன 04, 2024 09:16 AM


Google News
திருச்சி:
திருச்சி, பாரதிதாசன் பல்கலை, 38வது பட்டமளிப்பு விழா, விமான நிலையத்தில், புதிய முனையம் திறப்பு விழா ஆகியவற்றில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி, தனி விமானத்தில் திருச்சி வந்தார்.அவரை வரவேற்பதற்காக, பா.ஜ., கட்சியினர், வேன், கார், பஸ் ஆகியவற்றில் வந்திருந்தனர். அவர்கள், சாலை ஓரங்களில் நின்றபடி, கொடி அசைத்து, உற்சாக வரவேற்பு அளித்தனர். பிரதமர் மோடி, சர்தார் வல்லபபாய் பட்டேல், சத்ரபதி வீரசிவாஜி போல வேடம் அணிந்தும் கட்சியினர் வந்திருந்தனர்.பாரதிதாசன் பல்கலை பட்டமளிப்பு விழாவுக்கு, பிரதமர் மோடி சென்று திரும்பிய போது, அரசு பள்ளியில் ஹிந்தி பயிற்றுவிக்க வேண்டும்&' என்ற வாசக அட்டையை ஏந்தியவாறு, இரண்டாம் வகுப்பு மாணவி துவாரகா மதிவதனி என்ற சிறுமி, கூட்டத்தில் தந்தையுடன் நின்றிருந்தார்.இந்த போட்டோ, தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.




      Our Apps Available On




      Dinamalar

      Follow us