காலேஜ் எப்படி நடக்கும்? அறிந்து கொண்ட மாணவியர்

UPDATED : ஜன 03, 2024 12:00 AM
ADDED : ஜன 03, 2024 04:40 PM
திருப்பூர்:
உயர்கல்வி கற்கும் முன்பே, கல்லுாரி நிகழ்வுகளை மாணவ, மாணவியர் அறிந்து கொள்ளவும், உயர்கல்வி வாய்ப்பு குறித்து அறிந்து கொள்ளவும், பள்ளி கல்வித்துறை, கல்லுாரி கல்வி இயக்ககம் வாய்ப்புகளை ஏற்படுத்தி தருகிறது.அவ்வகையில், குன்னத்துார் மற்றும் ஊத்துக்குளி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, புதுராமகிருஷ்ணாபுரம் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய மூன்று பள்ளிகளை சேர்ந்த 105 மாணவியர், நேற்று திருப்பூர், மங்கலம் ரோடு, குமரன் மகளிர் கல்லுாரிக்கு வந்திருந்தனர்.கல்லுாரியில் செயல்படும் டிஜிட்டல் நுாலகம், அதன் செயல்பாடு, ஆய்வகம், வகுப்பறை, ஒவ்வொரு பட்டப்படிப்புக்கான புத்தகங்களை பார்வையிட்டனர். தொடர்ந்து, கல்லுாரியில் உயர்கல்வி குறித்த கருத்தரங்கம், நடந்தது. அதில், பிளஸ் 2 வகுப்புக்கு பின், என்ன படிக்கலாம் என்பது குறித்து மாணவியருக்கு, பேராசிரியர்கள் ஆலோசனை வழங்கினர்.