தேனியில் பிப்., முதல் வாரத்தில் புத்தக திருவிழா நடத்த ஏற்பாடு

UPDATED : ஜன 03, 2024 12:00 AM
ADDED : ஜன 03, 2024 10:42 AM
தேனி:
மாவட்டத்தில் பிப்ரவரி முதல் வாரத்தில் புத்தக்திருவிழா நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.தேனி மாவட்டத்தில் முதல் புத்தக திருவிழா பழனிசெட்டிபட்டியில் 2023 மார்ச் 3 முதல் 14 வரை நடந்தது. அதில் ரூ.81.06 லட்சத்திற்கு புத்தகங்கள் விற்பனையானது. பொது தேர்வு நேரத்தில் புத்தகத்திருவிழா நடந்த்தால் மேல்நிலைபள்ளி மாணவர்கள் பங்கேற்பதில் சிரமம் நிலவியது. இந்தாண்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் பிப்ரவரி முதல் வாரத்தில் புத்தகத்திருவிழா நடத்துவதற்கான ஏற்பாடுகள் துவங்கப்பட்டுள்ளன. அனைத்துத்துறை அதிகாரிகளுடனான கூட்டம், இடத்தேர்வு உள்ளிட்டவை விரைவில் மேற்கொள்ளப்பட உள்ளன. அதிகாரி ஒருவர் கூறுகையில், பள்ளி பொதுத்தேர்வு, லோக்சபா தேர்தல் உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு இந்தாண்டு பிப்ரவரியில் புத்தகத்திருவிழா நடத்துவதற்கான ஏற்பாடுகள் துவங்கி உள்ளதாக தெரிவித்தார்.