மெடிக்கல் ரிசர்ச் அறக்கட்டளைக்கு ரூ.79 லட்சம் எஸ்.பி.ஐ., நிதி உதவி

UPDATED : ஜன 03, 2024 12:00 AM
ADDED : ஜன 03, 2024 10:10 AM
சென்னை:
பாரத ஸ்டேட் வங்கியின் சென்னை வட்டம் சார்பில், சி.எஸ்.ஆர்., எனும் பெருநிறுவன சமூக பொறுப்பு நிதியில், மெடிக்கல் ரிசர்ச் அறக்கட்டளைக்கு நிதி உதவி வழங்கும் நிகழ்வு, சென்னை வட்டார தலைமையகத்தில் நடந்தது.இதில் ரெடினா, ஆப்டிக் டிஸ்க், மாகுலா மற்றும் போஸ்டீரியர் ஆகிய கண்ணின் உட்புற பாகங்களை படம் பிடிக்க பயன்படும் எப்.எப்.ஏ., உடனான கார்ல் ஜீஸ் கிளாரஸ் அல்ட்ரா வைட்பீல்ட் பண்டஸ் கேமரா&'வை வாங்க 79 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டது.இதற்கான காசோலையை, எஸ்.பி.ஐ., வங்கியின் நிர்வாக இயக்குனர் சல்லா ஸ்ரீனிவாசலு செட்டியிடம் இருந்து மெடிக்கல் ரிசர்ச் பவுண்டேஷனின் தலைவர் சுரேந்திரன், பொருளாளர் நாராயணன் பெற்றுக்கொண்டனர்.இந்நிகழ்வில், எஸ்.பி.ஐ., குளோபல் மார்க்கெட்ஸ் துணை நிர்வாக இயக்குனர் நந்தகிஷோர், சென்னை வட்டத்தின் தலைமை பொது மேலாளர் ரவிரஞ்சன், கார்ப்பரேட் மையத்தின் கருவூல அலுவலக தலைமை பொது மேலாளர் சமீர் சாஹ்னி உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.