Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/செய்தியாளர்களை அலைக்கழித்த செய்தி மக்கள் தொடர்பு துறை

செய்தியாளர்களை அலைக்கழித்த செய்தி மக்கள் தொடர்பு துறை

செய்தியாளர்களை அலைக்கழித்த செய்தி மக்கள் தொடர்பு துறை

செய்தியாளர்களை அலைக்கழித்த செய்தி மக்கள் தொடர்பு துறை

UPDATED : ஜன 03, 2024 12:00 AMADDED : ஜன 03, 2024 09:48 AM


Google News
திருச்சி:
திருச்சியில், விமான நிலையத்தின் புதிய முனையம் திறப்பு விழா, பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் பட்டமளிப்பு விழா ஆகியன நடந்தது. அவற்றில் பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் ஸ்டாலின், கவர்னர் ரவி போன்றவர்கள் பங்கேற்றனர்.இந்த நிகழ்ச்சிகளில், பிரதமர் நிகழ்ச்சி என்பதை காரணம் காட்டி, செய்தி சேகரிப்பதற்கும் போட்டோ, வீடியோ எடுப்பதற்கும், செய்தி நிறுவனத்தின் கடிதம் உட்பட பல்வேறு விதிமுறை களை கூறி, திருச்சி செய்தி- மக்கள் தொடர்பு துறையினர் நெருக்கடி கொடுத்தனர். அவற்றை பின்பற்றி அடையாள அட்டை பெற்றவர்களுக்கு, கார் பாஸ் போன்ற ஒன்றை பிரஸ் பாஸ் என்று கொடுத்தனர். அதிலும், பாரதிதாசன் பல்கலை நிகழ்ச்சிக்கு, அந்த பாஸை பயன்படுத்த முடியாது என்று தெரிவித்ததோடு, அங்கு அழைத்துச் செல்வதையும் தவிர்த்து விட்டனர்.ஒரு வழியாக திருச்சி விமான நிலையத்துக்கு என்று பெயரளவுக்கு பாஸ் தயார் செய்து கொடுத்த செய்தி மக்கள் தொடர்பு துறையினர், காயலான் கடைக்கு செல்ல வேண்டிய இரண்டு மினி பஸ்களில் செய்தியாளர்களையும், போட்டோ மற்றும் வீடியோ கிராபர்களையும் விமான நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு, இன்னோவா காரில் புதிய முனையத்துக்கு சென்று விட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை, செய்தியாளர்களை கண்டு கொள்ளவேயில்லை. அதனால், மினி பஸ் டிரைவர்கள், விமான நிலையத்துக்கு வெளியே போலீஸ் ஸ்டேஷன் அருகிலேயே அனைவரையும் இறக்கி விட்டுச் சென்றனர். அதனால், புதிய முனையம் வரை, செய்தியாளர்கள் கேமரா மற்றும் கிட்களுடன் நடந்தே சென்றனர். பலவாறாக அலைக்கழிக்கப்பட்ட செய்தியாளர்கள் கடும் அதிருப்பதியடைந்தனர்.




      Our Apps Available On




      Dinamalar

      Follow us