ஆதிச்சநல்லூருக்கு வெளிநாடுகளில் இருந்து 58 தமிழ் இளைஞர்கள் வருகை

UPDATED : ஜன 03, 2024 12:00 AM
ADDED : ஜன 03, 2024 09:46 AM
ஆதிச்சநல்லூர்:
முதல்வர் ஸ்டாலின் ஏற்பாடு படி உலகெங்கும் வாழும் தமிழ் உறவுகளை புதுப்பிக்கும் வகையில் வேர்களைத் தேடி திட்டம் கடந்த 27 ந் தேதி மகாலிங்கபுரத்தில் நடந்தது. அமைச்சர் செஞ்சி மஸ்தான் இப்பண்பாட்டு பணயத்தினை துவக்கி வைத்தார். தமிழ்நாடு அரசு அயலகத்தமிழர் நலத்துறை ஆணையர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார். இப் பண்பாட்டு பயணத்திற்காக ஆஸ்திரேலியா, கனடா, பிஜி, இலங்கை ஆகிய நாடுகளில் இருந்து 18 வயது முதல் 30 வயதுக்கு உள்பட்ட 58 இளைஞர்கள் தேர்வாகி தமிழ்நாடு அரசு செலவில் சென்னை வந்தடைந்தனர்.இவர்கள் மகாபலிபுரம், தஞ்சாவூர்,சிவகங்கை, தூத்துகுடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, மதுரை, திருச்சி,செஞ்சிகோட்டை, காஞ்சிபுரம் ஆகிய இடங்களுக்கு பயணித்தனர். அங்கு தமிழர்களின் கட்டிடகலை, சிற்பக்கலை, இயல், இசை, நாட்டியம், சிற்பம்,ஓவியம், சுதந்திரபோராட்ட வரலாறு, பல்வேறு தமிழ் இலக்கிய வரலாறு ஆகியவற்றை அறிந்துகொண்டார்கள். இவர்கள் தூத்துக்குடி மாவட்டத்தில் எட்டயபுரம் பாரதி மணிமண்டம், கோவில்பட்டி கி.ரா. மணி மண்டபம் ஆகிய வற்றை பார்வையிட்டார். அங்கு எழுத்தாளர் சோ. தர்மனுடன் கலந்துரையாடல் செய்தனர்.பின்னர் ஆதிச்சநல்லூருக்கு வருகை தந்தனர் அங்கு எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு அகழாய்வு ஆய்வு மாணவர்கள் மணிகண்டன், குமரேசன், ஆகியோருடன் கலந்தாய்வு நடத்தினர். ஆதிச்நல்லூரில் உள்ள சைட் மியூசியம், அகழாய்வு நடந்து வரும் சைட் ஆகியவற்றை பார்வையிட்டனர். இவர்கள் அயலகத்தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை துணை ஆட்சியர் செண்பகவள்ளி தலைமையில் இந்த பயணத்தினை மேற்கொண்டனர். இந்த குழுவில் கண்காணிப்பாளர் கனிமொழி, இராமநாதபுரம் மண்டலம் துணை ஆட்சியர் கண்ண கருப்பையா, வருவாய் ஆய்வாளர் பாலகிருஷ்ணன். தூத்துக்கடி மாவட்ட சுற்றுலா அலுவலர் திருவாசன், அறநிலையத்துறை கைடு முருகானந்ததாஸ், எழுத்தாளர் ராஜ்மோகன் உள்பட பலர் உடன் வந்தனர்.இந்த இளைஞர்கள் இருவார பயணத்தின் மூலம் தமிழர்களின் கலச்சாரம், வரலாறு, மொழியியில் உள்பட பல்வேறு திறன்களை கற்றுணர்வார்கள். மூன்றாவது ஆண்டாக அயலகத்தமிழர்கள் தினம் வரும் ஜனவரி 11 மற்றம் 12 ந்தேதி சென்னையில் உள்ள நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற உள்ளது. அதில் இந்த இளைஞர்கள் கலந்துகொள்ள இருக்கிறார்கள்.