கலாக்ஷேத்ரா வகுப்பறை மத்திய அமைச்சர் திறப்பு

UPDATED : ஜூலை 14, 2024 12:00 AM
ADDED : ஜூலை 14, 2024 08:40 PM
சென்னை: மத்திய அரசின் கலாசாரத் துறையின் கீழ், சென்னை திருவான்மியூரில் கலாக்ஷேத்ரா நாட்டியக் கல்லுாரி செயல்பட்டு வருகிறது.
மத்திய கலாசாரத் துறை அமைச்சராக பொறுப்பேற்ற கஜேந்திர சிங் ஷெகாவத், முதல் முறையாக கலாக்ஷேத்ரா பவுண்டேஷனுக்கு, நேற்று முன்தினம் காலை வந்தார். அவருக்கு, கலாக்ஷேத்ரா பவுண்டேஷன் நிர்வாகிகள், மலர் கொத்து கொடுத்து வரவேற்றனர்.
இதையடுத்து, அங்கு புதிதாக கட்டப்பட்ட இரண்டு புதிய வகுப்பு அறைகளை திறந்து வைத்தார். பின், மாணவர்களின் நடன வகுப்பு அறைகள் உட்பட வளாகத்தின் பல்வேறு பகுதிகளையும் பார்வையிட்டார்.
இதையடுத்து அவர், கலாக்ஷேத்ரா பவுண்டேஷன் இயக்குனர் சுரேஷ்குமார் சிக்காலா உள்ளிட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.