பதவி உயர்வுக்கு காத்திருக்கும் பணி ஆய்வாளர்கள்

UPDATED : ஏப் 13, 2024 12:00 AM
ADDED : ஏப் 13, 2024 10:14 AM
மதுரை:
பொதுப்பணித்துறை, நீர்வளத்துறையில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பணிஆய்வாளர்கள் 3 என்ற நிலையில் இருந்து பதவி உயர்வுபெறாமல் பரிதவிப்பதாக சங்கத்தினர் புகார் தெரிவிக்கின்றனர்.
பொதுப்பணித்துறையில் திட்டப்பணி, வேளாண் விவசாயப்பணி, கட்டடப்பணி மற்றும் கட்டட பராமரிப்பு வட்டம், நீர்வளத்துறை பாதுகாத்தல் பணிகளில் பணிஆய்வாளர் நிலை 3 ல் உள்ளவர்கள் அனைத்து களப்பணிகளையும் செய்கின்றனர். உதவியாளர், பாசன உதவியாளர் பதவிகள் தனியாக உள்ளன.
உதவியாளர் பதவிக்கு மேல் பணி ஆய்வாளர் நிலை- 3 உள்ளது. ஆனால் உதவியாளர்கள் 10 ஆண்டுகள் கழித்து பதவி உயர்வில் பணி ஆய்வாளர் நிலை- 2க்கு செல்கின்றனர். பணி ஆய்வாளர் நிலை- 3 ல் இருப்பவர்கள் 30 ஆண்டுகள் கழித்தும் அதே பணியில் பதவி உயர்வின்றி வேலை செய்கின்றனர்.
சம்பளத்தை பொறுத்தவரையில் உதவியாளர் அடிப்படை சம்பளம் ரூ.4800, பணி ஆய்வாளர் நிலை 3ன் அடிப்படை சம்பளம் ரூ.5200. ஆனால் உதவியாளர்கள் பணி உயர்வின்போது பணி ஆய்வாளர் நிலை 2ல் ரூ.5200 உடன் பணிஆய்வாளர் நிலை 3 ஐ விட அதிக அலவன்ஸ் பெறுகின்றனர்.
எல்லா பதவிகளுக்கும் அடிப்படை கல்வித்தகுதி உண்டு. அனுபவ அறிவை கொண்டுதான் பதவி உயர்வு வழங்கப்படுகிறது. பணிஆய்வாளர் நிலை 3க்கு கீழே உள்ள உதவியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்கும்போது, பணி ஆய்வாளர் நிலை 3 க்கு பதவி உயர்வு வழங்க மறுப்பது ஏனென்று தெரியவில்லை.
தமிழ்நாடு பொதுப்பணித்துறை ஊழியர் சங்க மதுரை, திண்டுக்கல், விருதுநகர் கிளை மாவட்ட செயலாளர் வரதமுனீஸ்வரன் கூறியதாவது: முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக இப்பதவியில் இருந்த 300க்கும் மேற்பட்டோர் பதவி உயர்வு, ஊதிய உயர்வு பெறாமல் ஓய்வு பெற்று விட்டனர்.
தற்போது தமிழகத்தில் 200 பேரும், மதுரையில் 60 பேரும் முறையான அடிப்படை ஊதியம் நிர்ணயம் செய்யப்படாமல் பதவி உயர்வுக்காக காத்திருக்கின்றனர். இது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளை சாதகமான தீர்ப்பு வழங்கியும் நிறைவேற்றவில்லை. தேர்தலுக்கு பின் அரசாணை நிறைவேற்றி எங்களுக்கு பதவி உயர்வும், ஊதிய நிர்ணயமும் செய்ய வேண்டும் என்றார்.