UPDATED : ஏப் 11, 2024 12:00 AM
ADDED : ஏப் 11, 2024 05:39 PM

புதுடில்லி:
க்யூ.எஸ்., எனப்படும் குவாக்கரெல்லி சைமண்ட்ஸ் வெளியிட்டுள்ள பாடப்பிரிவு அடிப்படையிலான கல்வி நிறுவனங்களின் தரவரிசைப் பட்டியலில், டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலை இந்தியாவில் முதலிடமும், உலகளவில் 20ம் இடமும் பிடித்துள்ளது.
லண்டனைச் சேர்ந்த உயர்கல்வி ஆராய்ச்சி நிறுவனம் குவாக்கரெல்லி சைமண்ட்ஸ். இந்நிறுவனம் ஆண்டுதோறும் உலகளவில் உள்ள கல்வி நிறுவனங்களை பல்வேறு பிரிவுகளின் கீழ் ஆய்வு செய்து தரவரிசைப்படுத்துகிறது.
தற்போது பாடப்பிரிவு அடிப்படையிலான உலக பல்கலையின் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி சமூக அறிவியலின் கிளைப் பாடமான மேம்பாட்டு கல்வியில் டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலை உலகளவில் 20ம் இடமும், இந்திய அளவில் முதலிடமும் பிடித்துள்ளது.
மேலாண்மை பாடப்பிரிவில் ஐ.ஐ.எம்., ஆமதாபாத் உலகளவில் முதல் 25 இடங்களுக்குள் இடம்பெற்றுள்ளது. ஐ.ஐ.எம்., பெங்களூரு, ஐ.ஐ.எம்., கோல்கட்டா ஆகியவை முதல் 50 இடங்களுக்குள் வந்துள்ளன.
அதே போல் பல் மருத்துவப் படிப்பில் சென்னையில் உள்ள சவீதா மருத்துவ மற்றும் தொழில்நுட்ப அறிவியல் நிறுவனம் உலகளவில் 24ம் இடம் பிடித்துள்ளது.
மேலும், க்யூ.எஸ்., வெளியிட்ட தகவலின் படி, உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் ஆராய்ச்சி மையங்களில் ஒன்றாக இந்தியா உள்ளது. 2017 முதல் 2022 வரை, இந்தியாவின் ஆராய்ச்சி கட்டுரை வெளியீடுகள் 54 சதவீதம் உயர்ந்துள்ளது.
இந்த காலகட்டத்தில் 13 லட்சம் ஆய்வு கட்டுரைகளை வெளியிட்டு இப்பிரிவில் உலக அளவில் 4ம் இடத்தில் இந்தியா உள்ளது. சீனா, அமெரிக்கா, பிரிட்டன் ஆகியவை முதல் மூன்று இடங்களில் உள்ளன.