ஜே.இ.இ., தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு
ஜே.இ.இ., தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு
ஜே.இ.இ., தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு
UPDATED : ஜன 19, 2025 12:00 AM
ADDED : ஜன 19, 2025 08:55 AM

சென்னை:
மத்திய அரசு கல்வி நிறுவனங்களான, ஐ.ஐ.டி., - என்.ஐ.டி., உள்ளிட்டவற்றில், பொறியியல் படிப்பு சேர்க்கைக்கு, ஜே.இ.இ., மெயின் மற்றும் அட்வான்ஸ் தேர்வுகள், தேசிய தேர்வு முகமை எனும் என்.டி.ஏ.,வால் நடத்தப்படுகின்றன.
முதல்கட்ட ஜே.இ.இ., மெயின் தேர்வு, பிப்., 22, 23, 24, 28, 29, 30ல் நடக்க உள்ளது. இதில் பங்கேற்க, 12 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் விண்ணப்பித்துள்ளனர். நாடு முழுதும் முக்கிய நகரங்களில் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளன. கணினியில் காலை, மாலை என நடத்தப்படும் இத்தேர்வு ஹால் டிக்கெட், என்.டி.ஏ., இணையதளத்தில் நேற்று மாலை வெளியிடப்பட்டது. ஒரே நேரத்தில் மாணவர்கள் ஆர்வத்துடன், டவுன் லோடு செய்ததால், சிறிது நேரம், சர்வர் முடங்கியது.