அரசு பள்ளிகள் சி.பி.எஸ்.இ.,க்கு மாறியதால் ஜவகர் கோடை வகுப்பு மே 2ம் தேதி துவக்கம்

UPDATED : ஏப் 23, 2024 12:00 AM
ADDED : ஏப் 23, 2024 10:39 AM

புதுச்சேரி:
அரசு பள்ளிகள் சி.பி.எஸ்.இ.,க்கு மாறியதால் ஜவகர் பால் பவன் கோடை வகுப்புகள் மே மாதம் துவங்குகிறது.
புதுச்சேரி ஜவகர் பால்பவனில் ஆண்டுதோறும் சிறுவர், சிறுமிகளுக்கான கோடை கொண்டாட்ட வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த வகுப்பில் ஆறு முதல் 16 வயது வரை உள்ள புதுச்சேரி அரசுப் பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளியைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஓவியம், இசை, நடனம், நுாலகம், கித்தார், டிரம்ஸ், கீபோர்ட், தையல், வயலின், வீணை, மிருதங்கம் உள்ளிட்ட 11 வகுப்புகள் நடத்தப்படுகிறது.
ஆண்டுதோறும் ஏப்ரல் 15ம் தேதி துவங்கி மே 30ம் தேதி வரை 45 நாட்களுக்கு இந்த வகுப்புகள் நடந்து வந்தன. இந்நிலையில் புதுச்சேரியில் அரசு பள்ளிகள் அனைத்தும் சி.பி.எஸ்.இ., பாடப்பிரிவுக்கு மாற்றப்பட்டதால், இந்த ஆண்டு ஏப்ரலில் அரசு பள்ளிகள் முழுமையாக இயங்கி வருகின்றன.
இதனால் அரசு பள்ளிகளின் விடுமுறை காலம் மே 1ம் தேதி முதல் துவங்குகிறது. அதையொட்டி, இந்த ஆண்டு கோடை கொண்டாட்ட வகுப்புகள் வரும் மே 2ம்தேதி துவங்கி, 30 நாட்களுக்கு மட்டுமே நடத்தப்படு கிறது.
கோடை வகுப்புகள் புதுச்சேரி மறைமலை அடிகள் சாலை உள்ள தலைமை ஜவகர் பால்பவன், லாஸ்பேட்டை கோலக்கார அரங்கசாமி நாயக்கர் அரசு நடுநிலைப்பள்ளி, கதிர்காமம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, வில்லியனுார் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, நோணாங்குப்பம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய ஐந்து இடங்களில் நடக்கிறது.
இதற்கான விண்ணப்பங்கள் வரும் 29ம் தேதி முதல் வழங்கப்படுகிறது. மாணவர்களின் இரண்டு புகைப்படம், பள்ளியின் அடையாள அட்டை நகலுடன் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கொடுத்து கோடை வகுப்பில் சேரலாம்.