தமிழகம் முழுதும் மறியல் ஜாக்டோ ஜியோ அறிவிப்பு

UPDATED : பிப் 15, 2025 12:00 AM
ADDED : பிப் 15, 2025 09:07 PM
சென்னை:
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான, ஜாக்டோ - ஜியோ சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக முழுதும் மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
சென்னையில் நந்தனம் ஒருங்கிணைந்த நிதித்துறை வளாகம் மற்றும் ரிப்பன் மாளிகை வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பங்கேற்று, கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
போராட்டம் குறித்து, ஜாக்டோ ஜியோ தென்சென்னை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முத்துகுமார் சாமுவேல் கூறியதாவது:
சட்டசபை தேர்தலின் போது, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஓட்டுகளை பெறுவதற்காக, ஆட்சிக்கு வந்ததும் பழைய ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்படும் என, ஸ்டாலின் கூறினார். ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகளாகியும் கோரிக்கையை நிறைவேறவில்லை.
முதல்வர் ஸ்டாலின், உடனடியாக ஜாக்டோ ஜியோ அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர்களுடன் பேச்சு நடத்த வேண்டும். தேர்தலின் போது அளித்த, பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்.
இல்லையெனில், அடுத்த கட்டமாக வரும், 25ம் தேதி, தமிழகம் முழுதும், மாவட்ட தலைநகரங்களில், மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.