Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பள்ளி ஆண்டு விழாவுக்கு ரூ.2,500 மட்டும் போதுமா?

பள்ளி ஆண்டு விழாவுக்கு ரூ.2,500 மட்டும் போதுமா?

பள்ளி ஆண்டு விழாவுக்கு ரூ.2,500 மட்டும் போதுமா?

பள்ளி ஆண்டு விழாவுக்கு ரூ.2,500 மட்டும் போதுமா?

UPDATED : ஜன 11, 2025 12:00 AMADDED : ஜன 11, 2025 09:59 AM


Google News
அரசால் இயக்கப்படும் பள்ளிகளில், தலா ஒரு பள்ளிக்கு, ஆண்டு விழா நடத்த வெறும் 2,500 ரூபாய் மட்டுமே அரசு ஒதுக்கி இருப்பதால், ஆசிரியர்கள் திணறுகின்றனர்.

தமிழகத்தில் அரசால் நடத்தப்படும் அனைத்து வகை பள்ளிகளிலும் ஆண்டு விழா கொண்டாடப்படுவது வழக்கம். அதை புகைப்படம் அல்லது வீடியோ எடுத்து, பள்ளிக் கல்வி இணையதளத்தில் பதிவும் செய்ய வேண்டியது கட்டாயம்.

மொத்தமுள்ள 37,576 பள்ளிகளுக்கு, 14.60 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப் பட்டுள்ளது.

ஆண்டு விழா
அதில், 100 மாணவர் எண்ணிக்கை உள்ள 26,082 பள்ளிகளுக்கு, தலா 2,500 ரூபாய்; 101 முதல், 250 மாணவர்கள் எண்ணிக்கை உள்ள, 7,397 பள்ளிகளுக்கு, 4,000 ரூபாய்; 251 முதல், 500 மாணவர் எண்ணிக்கை உள்ள, 2,377 பள்ளிகளுக்கு, 8,000 ரூபாய்; 501 முதல் 1,000 மாணவர் எண்ணிக்கை கொண்ட, 2,377 பள்ளிகளுக்கு, 15,000 ரூபாய்.

கிட்டத்தட்ட, 1,001 முதல், 2,000 மாணவர்கள் எண்ணிக்கை உள்ள, 327 பள்ளிகளுக்கு, 30,000 ரூபாய்; 2,001க்கு மேல் மாணவர்கள் எண்ணிக்கை உள்ள, 45 பள்ளிகளுக்கு, 50,000 ரூபாய் வழங்கப்படுகிறது.

அனைத்து முதுகலை ஆசிரியர்கள் சங்க மாநில பொதுச்செயலர் மகேந்திரன் கூறியதாவது:
பள்ளியில் ஆண்டு விழா நடத்த வேண்டும் என்றால், மைக் செட், பந்தல், சிறப்பு விருந்தினருக்கு பொன்னாடை, மாணவர்களுக்கு பரிசு என குறைந்தபட்சம், 7,000 முதல், 10,000 ரூபாய் வரை செலவாகும்.

இயலாத சூழல்
ஆனால், 250 மாணவர்கள் எண்ணிக்கை கொண்ட 89 சதவீதம் பள்ளிகளுக்கு, 2,500 முதல் 4,000 ரூபாய் வரையே நிதி ஒதுக்கப்படுகிறது. இந்த குறைந்தபட்ச தொகையை வைத்து, மாணவர்களுக்கு பரிசு பொருள் வாங்கவோ, விழா செலவுகளை செய்வதற்கோ இயலாத சூழல் உருவாகிவிடும்.

ஏழை, நடுத்தர மக்கள் படிப்பதால், பெற்றோரும், உதவி செய்யும் சூழலில் இல்லை. ஆண்டு விழாவை சிறப்பாக நடத்த வேண்டும் என்றால், அரசு ஒதுக்கீட்டை உயர்த்தி வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.








      Our Apps Available On




      Dinamalar

      Follow us