பொறியாளர்கள் பதிவுக்கு ஆன்லைன் வசதி அறிமுகம்

UPDATED : ஏப் 16, 2024 12:00 AM
ADDED : ஏப் 16, 2024 10:40 AM

சென்னை:
பொறியாளர்கள் உள்ளிட்ட தொழில்முறை வல்லுனர்கள், பதிவு பணிகளை மேற்கொள்வதற்கு வசதியாக, 'ஆன்லைன்' வசதியை சி.எம்.டி.ஏ., அறிமுகப்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் பொது கட்டட விதிகள், 2019ல் அமலுக்கு வந்தன. அதன்படி, கட்டுமான திட்ட அனுமதி முதல், பணிகளில் பல்வேறு நிலைகளில் தொழில் முறை வல்லுனர்கள் என்ற அடிப்படையில், பொறியாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்பது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.
இதற்காக, கட்டட அமைப்பியல் பொறியாளர்கள், கட்டுமான பொறியாளர்கள், கட்டட வடிவமைப்பாளர்கள், மேம்பாட்டாளர்கள் என, 13 வகை தொழில்முறை வல்லுனர்கள் பதிவு செய்ய வேண்டும்.
சென்னை பெருநகர் பகுதியில், பெரிய அளவிலான கட்டுமான திட்டங்களில் ஈடுபடுவோர், சி.எம்.டி.ஏ.,வில் பதிவு செய்ய வேண்டும். கடந்த, 2019ல் பதிவு செய்தவர்கள், தற்போது புதுப்பிக்கும் பணிகள் நடக்கின்றன. மேலும், புதிய வல்லுனர்களும், இதில் பதிவு செய்ய விண்ணப்பிக்கின்றனர்.
இது தொடர்பான நடவடிக்கைகள், மேனுவல் முறையிலேயே மேற்கொள்ளப்பட்டு வந்தது. தற்போது, கட்டுமான திட்ட அனுமதி சார்ந்த அனைத்து பணிகளும், ஆன்லைன் முறைக்கு மாற்றப்பட்டு உள்ளது.
இந்த பின்னணியில், தொழில்முறை வல்லுனர்கள் பதிவு பணிகளையும், ஆன்லைன் முறைக்கு மாற்ற சி.எம்.டி.ஏ., முடிவு செய்தது.
இதன்படி, தொழில்முறை வல்லுனர் பதிவு தொடர்பான பணிகளுக்கு, விண்ணப்ப பதிவு பணிகளை, onlineppacmda.tn.gov.in/ என்ற இணையதளம் வாயிலாக பெறப்படும் என, சி.எம்.டி.ஏ., நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதனால், தொழில்முறை வல்லுனர் பதிவு பணிகளுக்கு சி.எம்.டி.ஏ., அதிகாரிகளை நேரில் சந்திக்க வேண்டிய தேவை இருக்காது என கூறப்படுகிறது.