Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ நம்பிக்கை அளிக்கிறார் கேன்சரில் இருந்து மீண்டு வந்த ஆசிரியை பேட்டி

நம்பிக்கை அளிக்கிறார் கேன்சரில் இருந்து மீண்டு வந்த ஆசிரியை பேட்டி

நம்பிக்கை அளிக்கிறார் கேன்சரில் இருந்து மீண்டு வந்த ஆசிரியை பேட்டி

நம்பிக்கை அளிக்கிறார் கேன்சரில் இருந்து மீண்டு வந்த ஆசிரியை பேட்டி

UPDATED : அக் 14, 2024 12:00 AMADDED : அக் 14, 2024 03:05 PM


Google News
Latest Tamil News
புற்றுநோயிலிருந்து மீள, மனதளவிலான நம்பிக்கை எந்தளவு முக்கியமானது என்பதை விளக்குகிறார், மார்பக புற்றுநோயிலிருந்து மீண்ட, கோவை தனியார் பள்ளிஆசிரியை.

ஆரோக்கியத்தில் அக்கறை



எப்போதும் சுறுசுறுப்பாக இயங்க கூடியவள். ஆரோக்கியத்தின் மீது அதிக அக்கறை கொண்ட எனக்கு சளி, காய்ச்சல் கூட அவ்வளவு சீக்கிரம் வராது. நான் வலிமையானவள் என்ற கர்வம், எப்போதும் எனக்குள் இருக்கும்.

இந்த நிலையில்தான், 2021ல் திடீர் சோர்வு, உடல் வலிக்காக ஜி.கே.என்.எம்., மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றேன். பரிசோதனையில், மார்பக புற்றுநோய் இருப்பது உறுதி செய்யப்பட்டது. எனக்கு புற்றுநோய் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. என் தன்னம்பிக்கை எல்லாம், சுக்குநுாறாக உடைந்து விட்டது. அனைத்தையும்இழந்து விட்டதாக உணர்ந்தேன்.

பார்த்துக்கலாம்...விடு!


இந்த தருணத்தில் என் கணவர் எனக்கு சொன்ன ஒரு வார்த்தை, எதுவா இருந்தாலும் பார்த்துக்கலாம். சேர்ந்து இதிலிருந்து மீள்வோம் என குடும்பத்தினர் தெரிவித்தனர்.

இந்த வார்த்தைகள் என்னுள் மீண்டும் நம்பிக்கையை விதைத்தது. கணவர், குழந்தைகள், அம்மா, அப்பா, மாமியார் என மொத்த குடும்பத்தினரும், பெரும் ஆதரவாக இருந்தனர். மருத்துவர்கள், கேன்சர் சர்வைவர்ஸ், நண்பர்கள், ஒவ்வொருவரும் எனக்கு தொடர்ந்து நம்பிக்கை கொடுத்தனர். பொதுத்தேர்வு நேரம் என்பதால், கீமோ சிகிச்சை எடுத்த மறுநாளே மாணவர்களுக்கு வகுப்புகள் எடுத்தேன். வகுப்பறையில் நின்று கற்பிப்பது, என்னை மீண்டும் வலிமையாக உணர வைத்தது.

உதவியது யோகா!


உடற்பயிற்சி,யோகா, தியான பயிற்சிகள் மூலம் உடல், மனதை வலிமைப்படுத்தினேன். புற்றுநோயிலிருந்து முழுமையாக மீண்டு, இப்போது மூன்று வருடங்களாகி விட்டது. புற்றுநோய்க்கு எதிரான போராட்டம், என்னுள் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. புதியவளாக உணர்கிறேன். முன்பை விட, உடல் வலிமையும், மன நம்பிக்கையும் பல மடங்கு அதிகரித்துவிட்டது போல உணர்கிறேன். நேர்மறை எண்ணங்களுடன் மகிழ்வாக இருக்கிறேன்.

புற்றுநோய்க்கு எதிரான போராட்டம் உடல் ரீதியானது மட்டுமில்லை, உளவில்ரீதியானதும் கூட. மருத்துவத்துடன், குடும்பத்தினர் உள்பட சக மனிதர்களின் ஆதரவும் நுாறு சதவீதம் தேவை.

கீமோ சிகிச்சையின் போது ஒருநாள், என்னால் முடியாது, குழந்தைகளை பார்த்துக்கொள்ளுங்கள்' என்று கூறி உடைந்து அழுதேன். அப்போது, நீ நல்லபடியாய் மீண்டு வந்து உன் குழந்தைகளை பார்க்கபோகிறாய் என, நர்ஸ் ஒருவர் கூறினார்.

இப்படி சக மனிதர்கள் தரும் நம்பிக்கை, தைரியம் நம்மை தொடர்ந்து போராட வைக்கும். நம்பிக்கையால் மீண்ட நான் தற்போது, மற்ற கேன்சர் நோயாளிகளுக்கும் தன்னம்பிக்கை அளித்து வருகிறேன்.

ரோஸ் காட்டிய வழி!


புற்றுநோயாளிகளின் நலனுக்காக, உலகம் முழுவதும் ரோஸ் தினம் கொண்டாடப்படுகிறது. கனடாவை சேர்ந்த 12 வயது மெலிண்டா ரோஸ் அஸ்கின்ஸ் டியூமர் எனப்படும் அரிய வகை ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இரண்டு வாரங்களில் இறந்து விடுவார் என மருத்துவர்கள் கூறிய நிலையில், குடும்பத்தினரின் அன்பின் காரணமாக, ஆறு மாதங்கள் உயிர் வாழ்ந்தார்.இந்த காலத்தில் தன்னை போன்ற மற்ற கேன்சர் நோயாளிகள், அவர்களை பராமரிப்பவர்களை நேரில் சந்தித்து, கேன்சரிலிருந்து மீண்டு விடலாம் என்ற நம்பிக்கையையும், தைரியத்தையும் அளித்தார். ரோஜாக்கள், கடிதங்கள், பரிசுகளை பகிர்ந்து அவர்களை உற்சாகமூட்டினார். 1996ல் இறந்த மெலிண்டாவின் நினைவாக கேன்சர் நோயாளிகள், அவர்களின் உறவுகளுக்கு ஆதரவு அளிக்கும் வகையில், ரோஸ் தினம் அனுசரிக்கப்படுகிறது.




      Our Apps Available On




      Dinamalar

      Follow us