பள்ளிகளில் உள்கட்டமைப்பு பணி : பயன்பாட்டு சான்று பெற அறிவுரை

UPDATED : ஜூன் 17, 2024 12:00 AM
ADDED : ஜூன் 17, 2024 10:20 AM

பொள்ளாச்சி:
உள்ளாட்சி அமைப்பு வாயிலாக, அரசு பள்ளிகளில் உட்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளும்போது, அப்பணியில் திருப்தி ஏற்பட்டால் பயன்பாட்டு சான்று வழங்கலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், அரசு உயர்நிலை, மேல்நிலை மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், நகராட்சி மற்றும் ஆதிதிராவிடர் பள்ளிகள் உள்ளன.
அவ்வகையில், அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்வதற்கு, பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி வாயிலாக நிதியை பெற்று, அந்தந்த வட்டார வளர்ச்சி நிர்வாகங்களால், வளர்ச்சி பணிகள் நிறைவேற்றப்படுகின்றன.
இருப்பினும், தற்போது, ஒவ்வொரு உள்ளாட்சி அமைப்பு வாயிலாக உட்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டும் வருகிறது. அதன்படி, பள்ளிகளில், கூடுதல் கட்டடம், கழிப்பறை, குடிநீர் வசதிகள் மேம்படுத்தப்படுகின்றன.
இந்நிலையில், மேம்பாட்டு பணியில், பள்ளித் தலைமையாசிரியர்கள் திருப்தி அடைந்து, அவர்கள் வாயிலாக 'பயன்பாட்டு சான்றிதழ்' பெற்றால் மட்டுமே நிதி விடுவிக்கப்படும் என, ஒப்பந்ததாரர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பள்ளித் தலைமையாசிரியர்கள் கூறியதாவது:
தற்போது, சில பள்ளிகளில், அந்தந்த உள்ளாட்சி அமைப்பு வாயிலாக, உட்கட்டமைப்பு மேம்பாட்டு பணி மேற்கொள்ளப்படுகிறது. அப்பணியை தரமாக மேற்கொள்ள வேண்டும். குறுகிய காலத்திலேயே சீரமைப்பு பணியைத் தொடரும் வகையில் இருத்தல் கூடாது எனவும் ஒப்பந்ததாரர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதற்காக, உட்கட்டமைப்பு மேம்பாட்டு பணி மேற்கொள்ளும் ஒப்பந்ததாரர்கள், பள்ளித் தலைமையாசியரின் பயன்பாட்டு சான்று பெறுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.