வட்டார கல்வி அலுவலர்களுக்கு அதிகரிக்கும் வேலைப்பளு!

UPDATED : ஜூலை 03, 2024 12:00 AM
ADDED : ஜூலை 03, 2024 09:42 AM

மதுரை :
தமிழகத்தில் தொடக்க கல்வித்துறையில் வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு (பி.இ.ஓ.,க்கள்) கூடுதல் பணி காரணமாக கற்றல் கற்பித்தல் மேற்பார்வை பணிகளை கண்காணிக்க முடியாமல் தொய்வு ஏற்படுகிறது. ஆசிரியர்களுக்கு சம்பளம் ஒப்புதல் வழங்கும் அதிகாரத்தை மாவட்ட கல்வி அலுவலர்கள் (டி.இ.ஓ.,க்களுக்கு) வழங்க வேண்டும் என ஆசிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இத்துறையில் தொடக்க, நடுநிலை என 31 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகள் உள்ளன. 96 ஆயிரம் ஆசிரியர்களும், 26 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களும் உள்ளனர். மாவட்டம் வாரியாக தொடக்கக் கல்வி டி.இ.ஓ.,வும், அவருக்கு கீழ் ஒரு கல்வி ஒன்றியத்திற்கு தலா 2 அல்லது 3 பி.இ.ஓ.,க்கள் உள்ளனர். இதன் மூலம் மாநில அளவில் 382 கல்வி ஒன்றியங்களில் 700க்கும் மேற்பட்ட பி.இ.ஓ.,க்கள் உள்ளனர்.
இவர்களுக்கு மாணவர்கள், ஆசிரியர்களின் கற்றல் கற்பித்தலை கண்காணிப்பது, நோட்டு புத்தகங்கள் உட்பட அரசின் 19 நலத்திட்டங்களை பள்ளிகளுக்கு நேரடியாக வினியோகித்து, அதுதொடர்பான விவரங்களை பதிவேற்றம் செய்வது, அரசு, உதவி பெறும் ஆசிரியர்களுக்கு சம்பள ஒப்புதல் வழங்குவது, தொடக்க, நடுநிலை தலைமையாசிரியரின் பணப் பலன்களுக்கு ஒப்புதல் அளிப்பது, ஆசிரியர்கள் பணிப் பதிவேடுகளை பராமரிப்பது, வழக்கமான பள்ளி ஆய்வுகள், ஆண்டாய்வுகள், நீதிமன்ற வழக்குகளுக்கு பதில் அளிப்பது என ஏராளமான பணிகள் உள்ளன.
இந்நிலையில் தற்போது இல்லம் தேடி கல்வித் திட்டம், எண்ணும் எழுத்தும், புதிய பாரதம் எழுத்தறிவுத் திட்டம் என அடுத்தடுத்து அரசின் திட்டங்கள் தொடக்க கல்வியை அடிப்படையாக கொண்டு செயல்படுத்தி வருகிறது. அதிகரிக்கும் இதுபோன்ற பணிப்பளுவால் மனஉளைச்சலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
டி.இ.ஓ.,க்களுக்கு மாற்றுங்க
இதுகுறித்து பி.இ.ஓ.,க்கள் சிலர் கூறியதாவது:
தொடக்க கல்வியில் ஆசிரியர்கள் கற்பிக்கும் திறனை பொறுத்தே மாணவர்களின் கல்வித்திறன் வளர்ச்சி இருக்கும். இதனால் அடிப்படை கல்வி இங்கு இருந்து தான் துவங்குகிறது. அதை கண்காணிப்பதற்கான நேரம் பி.இ.ஓ.,க்களுக்கு தற்போது குறைந்து வருகிறது.
குறிப்பாக மாணவர்களுக்கான நலத்திட்டங்களை கண்காணித்து பள்ளிகளுக்கு அனுப்புவதும், அரசு, உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளம் 'பில்'களை சரிபார்ப்பதும் பெரும் சவாலான பணியாக உள்ளது.
உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு சம்பளம் ஒப்புதல் வழங்கும் அதிகாரம் டி.இ.ஓ.,க்களுக்கு இருப்பது போல் தொடக்க கல்வியிலும் சம்பளம் ஒப்புதல் அளிக்கும் அதிகாரத்தை டி.இ.ஓ.,க்களுக்கு வழங்க வேண்டும். அப்போது தான் ஆசிரியர் - மாணவர்களின் கற்றல் கற்பித்தலில் அதிக கவனம் செலுத்த முடியும்.
தற்போது புதிதாக பொறுப்பேற்றுள்ள இத்துறை இயக்குநர் சேதுராமவர்மா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.