பள்ளி மாணவர்களுக்கு ஜாதி, குடியிருப்பு சான்றிதழ் வழங்க சிறப்பு முகாம் துவக்கம்

UPDATED : மே 16, 2024 12:00 AM
ADDED : மே 16, 2024 10:33 AM
புதுச்சேரி:
புதுச்சேரியில் பள்ளி மாணவர்களின் மேற்படிப்பிற்கு சாதி, குடியிருப்பு சான்றிதழ் வழங்குவதற்கான சிறப்பு முகாமில், ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
புதுச்சேரியில், 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பு முடித்த மாணவர்கள் சிரமம் இன்றி, சான்றிதழ்களை வழங்கவும், சிறப்பு முகாம் நடத்த, வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் குலோத்துங்கன் உத்தரவிட்டார்.
இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் சார்பில், ஏற்பாடு செய்திருந்தனர். இதையொட்டி நேற்று, முத்தியால்பேட்டை வார்டு-ஏ, வார்டு-பி, வருவாய் கிராமத்திற்கு, சின்னாத்தா அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், சிறப்பு முகாம் நடந்தது. தாசில்தார் பிரித்வி தலைமையில் நடந்தது.
முதலியார்பேட்டை, புதுப்பாளையம் வருவாய் கிராமத்துக்கு மணிமேகலை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், நடந்த சிறப்பு முகாமில், துணை தாசில்தார் ராஜலட்சுமி பங்கேற்றார். காலாப்பட்டு, பிள்ளைச்சாவடி வருவாய் கிராமங்களுக்கு, காலாப்பட்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், சிறப்பு முகாமை தாசில்தார் ராஜேஷ் கண்ணா துவங்கி வைத்தார். துணை தாசில்தார் செந்தில்நாதன் முகாமை நடத்தினார்.
டி.என்.பாளையம், அபிேஷகப்பாக்கம் வருவாய் கிராமங்களுக்கு, சேத்திலால் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த சிறப்பு முகாமில், துணை தாசில்தார் வேல்முருகன் தலைமையில் நடந்தது.
காலை 9:30 மணிக்கு, துவங்கி சிறப்பு முகாம் மாலை 5:00 மணி வரை நடந்தது. இந்த முகாம்களில், 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவியர், தங்களது பெற்றோருடன் கலந்து கொண்டு, சாதி மற்றும் குடியிருப்பு சான்றிதழ் கேட்டு தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பித்தனர். உடனே வருவாய்த்துறை அதிகாரிகள், ஆவணங்களை சரிபார்த்து சான்றிதழ்களை வழங்கினர்.
புதிதாக சான்றிதழ் கேட்டு வந்த மாணவர்களுக்கு மட்டும் வீட்டிற்கு வி.ஏ.ஓ., வந்து ஆய்வு செய்த பிறகு, சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனக்கூறி விண்ணப்பங்களை வாங்கி வைத்து கொண்டனர். இந்த முகாம் வரும், 18,ம் தேதி வரை நடக்கிறது.