Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/2026 சட்டசபை தேர்தலில் தி.மு.க.,வை ஆசிரியர்கள்தான் ஆட்சியை விட்டு இறக்குவர்

2026 சட்டசபை தேர்தலில் தி.மு.க.,வை ஆசிரியர்கள்தான் ஆட்சியை விட்டு இறக்குவர்

2026 சட்டசபை தேர்தலில் தி.மு.க.,வை ஆசிரியர்கள்தான் ஆட்சியை விட்டு இறக்குவர்

2026 சட்டசபை தேர்தலில் தி.மு.க.,வை ஆசிரியர்கள்தான் ஆட்சியை விட்டு இறக்குவர்

UPDATED : ஜூன் 18, 2024 12:00 AMADDED : ஜூன் 18, 2024 08:05 AM


Google News
கோவை:
வரும் 2026 சட்டசபை தேர்தலில் தி.மு.க.,வை ஆட்சியை விட்டு இறக்கப் போவது ஆசிரியர்கள் தான் என பட்டதாரி ஆசிரியர் கழக நிறுவனத் தலைவர் மாயவன் பேசினார்.

கோவையில் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில், ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு பணி நிறைவு பாராட்டு விழா, குனியமுத்துார் நேரு விமானவியல் கல்லுாரியில் நேற்று நடந்தது.

விழாவுக்கு, சங்கத்தின் மாவட்ட தலைவர் சரவணக்குமார் தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவர் அருளானந்தம் முன்னிலை வகித்தார். விழாவில் பங்கேற்ற பட்டதாரி ஆசிரியர் கழக நிறுவனத் தலைவர் மாயவன், பணி ஓய்வு பெற்ற 77 பட்டதாரி ஆசிரியர்களுக்கு, நினைவு பரிசு வழங்கி பாராட்டினார்.

விழாவில் மாயவன் பேசியதாவது:

ஆசிரியர்கள் எவ்வளவுதான் கடமை தவறாமல் கடுமையாக பணியாற்றினாலும், அவர்களின் உரிமைகளை, பறிப்பதில் தமிழக அரசு குறியாக இருக்கிறது.

பல ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அதை நிரப்பாமல், இருக்கும் ஆசிரியர்கள் மேல் பணிச்சுமையை அதிகரிக்கின்றனர். அரசு பள்ளிகளில் கல்வித்தரம் சரியில்லை என்று ஆசிரியர்கள் மீது குற்றம் சொல்கின்றனர்.

தி.மு.க., அரசு ஆசிரியர்களை பழிவாங்கும் எண்ணத்துடன் செயல்படுகிறது. அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த மறுக்கிறது.

கடந்த சட்டசபை தேர்தலில், தி.மு.க.,வுக்கு ஓட்டுப்போட்டு, ஆட்சியில் அமர வைத்தவர்கள் ஆசிரியர்கள். வரும் 2026 சட்டசபை தேர்தலில், தி.மு.க.,வை ஆட்சியை விட்டு இறக்கப் போவதும் ஆசிரியர்கள்தான்.
இவ்வாறு, அவர் பேசினார்.




      Our Apps Available On




      Dinamalar

      Follow us