குழந்தைகளுக்கு தடுப்பூசி; கண்காணிக்க குழு

UPDATED : ஏப் 26, 2024 12:00 AM
ADDED : ஏப் 26, 2024 09:34 AM

திருப்பூர்:
சுகாதாரத்துறை அமைச்சகத்தின், தேசிய தடுப்பூசி அட்டவணையின் கீழ் மொத்தம், 11 வகை தடுப்பூசிகள் குழந்தைகளுக்கு செலுத்தப்படுகிறது.
இதற்காக, அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, மாவட்ட அளவிலான அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள் உட்பட, 11 ஆயிரம் தடுப்பூசி மையங்கள் செயல்படுகிறது. மாநிலம் முழுதும் பத்து லட்சத்துக்கும் அதிகமாக குழந்தைகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் தடுப்பூசி செலுத்திய போதும், தடுப்பூசி செலுத்தாமல் விடுபடுவது தொடர்கிறது. எனவே, தடுப்பூசி செயல்பாடுகளை கண்காணிக்க, சிறப்பு நடவடிக்கையை பொது சுகாதாரத்துறை முன்னெடுத்துள்ளது.
எந்த சுகாதார மாவட்டம் தடுப்பூசி செயல்பாட்டில் பின் தங்கியுள்ளது என்பதை கண்டறிந்து, அதனை சரிசெய்வதற்கான நடவடிக்கை முடுக்கி விடப்பட உள்ளது. இதற்காக, சுகாதார மாவட்டங்கள் தோறும் தடுப்பூசி செயல்பாட்டுக்கு மதிப்பீடு வழங்க, கண்காணிக்க தனிக்குழு உருவாக்கப்பட்டுள்ளது.
அக்குழுவினர், சுகாதார மாவட்டங்களில், 90 முதல், 95 சதவீதம் தடுப்பூசி செலுத்தப்பட்டிருந்தால், ஐந்து மதிப்பெண்ணும், 95 சதவீதத்துக்கு மேல் செயல்பாடு இருந்தால், பத்து மதிப்பெண்ணும் வழங்குகின்றனர். 90 சதவீதத்துக்கும் குறைவாக தடுப்பூசி செலுத்தப்பட்டிருந்தால், அந்த மாவட்டத்துக்கு பூஜ்யம் மதிப்பெண் வழங்குவர். தடுப்பூசி செயல்பாடுகள் குழுக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு, என்ன காரணம் என்ற விவரம் கண்டறியப்பட உள்ளது.