ஆப்சென்ட் டாக்டர்கள் உடனடி பணி நீக்கம்; அமைச்சர் சுப்பிரமணியன் எச்சரிக்கை

UPDATED : நவ 13, 2024 12:00 AM
ADDED : நவ 13, 2024 04:49 PM
கோவை:
நகர்ப்புற நல்வாழ்வு மையங்களில் டாக்டர்கள் பணி நேரத்தில் இல்லை எனில், உடனடி பணி நீக்கம் செய்யப்படுவர் என, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்ரமணியன் தெரிவித்தார்.
கோவை அரசு மருத்துவமனையில் ஜப்பான் நாட்டு நிதியுதவியுடன், 13 கோடி ரூபாய் மதிப்பிலான, அதிநவீன எம்.ஆர்.ஐ., ஸ்கேன் மையம் மற்றும் கருவியை அமைச்சர் சுப்பிரமணியன் நேற்று துவக்கி வைத்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
தமிழகத்தில் துவக்க திட்டமிடப்பட்ட, 702 நகர்ப்புற நல்வாழ்வு மையங்களில், 500 மையங்கள் திறக்கப்பட்டுஉள்ளன. இம்மையங்களில் டாக்டர்கள் காலை, 8:00 முதல் மதியம் 12:00 மணி; மாலை 4:00 முதல் இரவு 8:00 மணி வரை பணிபுரிவர்.
இதை கண்காணிக்கவே, நான் செல்லும் மாவட்டங்களில், சர்ப்ரைஸ் விசிட் செய்கிறேன்.
கோவை மாநகராட்சியில் நான்கு இடங்களில் ஆய்வு செய்ததில், ஒரு மையத்தில் டாக்டர் அருகில் சென்றிருப்பதாகவும், மற்றொன்றில் டாக்டர் அனுமதி பெற்று விடுப்பில் இருந்ததாகவும் கூறினர். இம்மையங்களில் டாக்டர்கள் மாலை நேரத்தில் பணிக்கு வருவதில்லை என, புகார்கள் வந்தன.
காலை, மாலை நேரத்தில் டாக்டர்கள் வருகை குறித்து ஆய்வு செய்ய, மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பணி நேரத்தில் இல்லாத டாக்டர்கள் பணி நீக்கம் செய்யப்படுவர்.
சம்பந்தப்பட்ட பணியிடங்கள் அந்தந்த மாவட்ட கலெக்டரால் நிரப்பப்படும். இவ்வாறு அவர் கூறினார்.