விளையாட்டு வீரர்களுக்கு அங்கீகாரம்!
விளையாட்டு வீரர்களுக்கு அங்கீகாரம்!
விளையாட்டு வீரர்களுக்கு அங்கீகாரம்!
UPDATED : ஜூன் 18, 2024 12:00 AM
ADDED : ஜூன் 18, 2024 10:45 AM

நாட்டிலேயே முதல் ஐ.ஐ.டி.,யாக இளநிலை பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில், விளையாட்டு வீரர்களுக்கு இட ஒதுக்கீட்டை அறிமுகப்படுத்தி உள்ளது, இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி - சென்னை.
இத்திட்டத்தின்படி, ஒவ்வொரு இளநிலை பட்டப்படிப்பிலும் மாணவிகளுக்கு பிரத்யேகமாக ஒரு இடம் உட்பட மொத்தம் 2 இடங்கள் கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்படுகிறது. விளையாட்டில் சிறந்து விளங்கும் திறமையான மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ள இத்திட்டம், அவர்களை விளையாட்டுகளில் தொடர்ந்து பங்கெடுக்கச் செய்வதுடன், உயர்கல்வியைத் தொடரவும் வழிவகுக்கிறது.
இந்த சலுகையை பெற, ஜே.இ.இ., - அட்வான்ஸ்டு தேர்வில் தகுதி பெற்றிருக்க வேண்டும். இருப்பினும், ஜோசா -JoSAA கவுன்சிலிங் வாயிலாக மாணவர் சேர்க்கை நடைபெறாது. மாறாக, ஐ.ஐ.டி.,-சென்னை இதற்கான https://jeeadv.iitm.ac.in/sea எனும் தனி இணையப்பக்கத்தை துவக்கி உள்ளது.
“இளைஞர்களுக்கு நல்ல ஆரோக்கியத்தையும், ஒழுக்கமான வாழ்க்கையையும் மட்டுமல்ல, வெற்றி தோல்விகளைக் கையாளும் மன முதிர்ச்சியையும், விடாமுயற்சி மற்றும் கடின உழைப்பால் தோல்விகளை வெற்றியாக மாற்றுவதையும் விளையாட்டு கற்றுக்கொடுக்கிறது'' என்று அதன் இயக்குனர் காமகோடி குறிப்பிட்டுள்ளார்.