சென்னை ஐஐடி-இஸ்ரோ இணைந்து செமிகண்டக்டர் சிப்கள் உருவாக்கம்

UPDATED : பிப் 12, 2025 12:00 AM
ADDED : பிப் 12, 2025 11:35 AM

சென்னை:
சென்னை ஐஐடி-இஸ்ரோவும் இணைந்து ஆத்மநிர்பர் விண்வெளித் தரமான சக்தி அடிப்படையிலான செமிகண்டக்டர் சிப்பை மேம்படுத்தி உருவாக்கியுள்ளது
ஐரிஸ் சிப் சக்தி பிராசசர் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. இது ஐஒடி-கணினிஅமைப்புகளிலிருந்து உத்திசார் தேவைகளுக்காக பல்வேறு களங்களில் பயன்படுத்தப்படும். விண்வெளித் தொழில்நுட்பங்களில் ஆத்ம நிர்பர் பாரத் தொடர்பான பயணத்துடன் இணைந்து, அதன் பயன்பாடுகள், கட்டளை-கட்டுப்பாட்டு அமைப்புகள், பிற முக்கியமான செயல்பாடுகளுக்கு இஸ்ரோ பயன்படுத்தும் செமிகண்டக்டர்களை உள்நாட்டிலேயே உருவாக்கும் முயற்சியின் ஒரு கட்டமாக இத்திட்டம் இருந்து வருகிறது.
இந்தப் புதிய மைக்ரோபிராசசரின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து, சென்னை ஐஐடி இயக்குநர் பேராசிரியர் காமகோடி கூறுகையில், சிப் வடிவமைப்பு, சிப் உற்பத்தி, சிப் பேக்கேஜிங், மதர் போர்டு வடிவமைப்பு- உற்பத்தி, அசெம்பிளி, மென்பொருள், பூட் - அனைத்தும் இந்தியாவில் தயாரிக்கப்பட்டது, எனக் குறிப்பிட்டார்.
சக்தி வகை சிப்-களின் மூன்றாவது தொடர்ச்சியான வெற்றி குறித்து கருத்து தெரிவித்த எஸ்சிஎல் சண்டிகரின் இயக்குநர் ஜெனரல் கமல்ஜீத் சிங் ஐரிஸ்-எல் வி பிராசசரின் வெற்றிகரமான வளர்ச்சியில் ஐஐடிமெட்ராஸ், எஸ்ஆர்ஓ ஆகியவற்றுடன் எஸ்சிஎல் இணைந்திருப்பதில் பெருமைகொள்கிறது. ஐரிஸ்-எல்வி பிராசசர் முழுமையாக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டதாகும். மாஸ்க் பிரேம் வடிவமைப்பு, ஜிடிஎஸ் தயாரிப்பு- சோதனைஆகியவற்றைஉள்ளடக்கிய எஸ்சிஎல்-ன்180 என்எம் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டது. சிறந்த தயாரிப்புகளை உருவாக்கவும் ஆத்மநிர்பர்தாவை எளிதாக்கி சாதனைகளைப் படைக்கவும் கல்வியாளர்கள், ஸ்டார்ட் அப் நிறுவனங்களுடன் எஸ்சிஎல் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது, எனத் தெரிவித்தார்.