Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ அரசு பள்ளி மாணவர்களுக்கு தோட்டக்கலை பயிற்சி

அரசு பள்ளி மாணவர்களுக்கு தோட்டக்கலை பயிற்சி

அரசு பள்ளி மாணவர்களுக்கு தோட்டக்கலை பயிற்சி

அரசு பள்ளி மாணவர்களுக்கு தோட்டக்கலை பயிற்சி

UPDATED : அக் 05, 2024 12:00 AMADDED : அக் 05, 2024 09:52 AM


Google News
Latest Tamil News
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் ஒன்றியம், ஆற்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ- மாணவியர், காஞ்சிபுரம்- உத்திரமேரூர் சாலை, விச்சந்தாங்கலில் அரசு தோட்டக்கலை பண்ணைக்கு நேற்று, பண்ணை சுற்றுலா மேற்கொண்டனர்.

இங்கு பண்ணை மேலாளர் சவுமியா, உதவி தோட்டக்கலை அலுவலர் மு.தனஞ்ஜெயன் ஆகியோர், மாணவ - மாணவியருக்கு செடிகள் வளர்த்தல், பதியன் போடுதல், ஒட்டு கட்டுதல், மண்புழு உரம் தயாரித்தல் உள்ளிட்ட பணிகளை செயல்விளக்க முறை விளக்கத்துடன் பயிற்சி அளித்தனர்.

இத்திட்டத்தில் பிற அரசு பள்ளியைச் சேர்ந்த பள்ளி மாணவ- - மாணவியரும் பங்கேற்கலாம் என, தோட்டக்கலைத் துறையினர் தெரிவித்துள்ளனர்.




      Our Apps Available On




      Dinamalar

      Follow us