நடுநிலைப் பள்ளிகளுக்கு இன்று முதல் விடுமுறை

UPDATED : ஏப் 06, 2024 12:00 AM
ADDED : ஏப் 06, 2024 05:53 PM

திருப்பூர்:
துவக்க, நடுநிலைப்பள்ளிகளுக்கு ஏப்., 2 முதல், 12 தேதி வரை இறுதியாண்டு தேர்வுகள் நடக்குமென பள்ளி கல்வித்துறை அறிவித்தது. அதன்படி, தேர்வுகள் துவங்கிய நிலையில், 9ம் தேதி, யுகாதி, 12ம் தேதி, ரம்ஜான் பண்டிகை என்பதால், தேர்வு அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டது.
தமிழ், ஆங்கிலம், கணித தேர்வுகள் முடிந்த நிலையில், மீதமுள்ள அறிவியல், 22ம் தேதியும்,சமூக அறிவியல், 23ம் தேதியும் நடக்குமென அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இன்று (6ம் தேதி) முதல், வரும், 21ம் தேதி வரை, 16 நாட்களுக்கு மாணவர்களுக்கு விடுமுறை என சில பள்ளிகளை சேர்ந்த தலைமை ஆசிரியர்கள் அறிவித்துள்ளனர்.
திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா கூறுகையில், நடுநிலைப்பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை அதிகமாக இருந்தால், 22 மற்றும், 23ம் தேதிகளில் தேர்வை நடத்துவதில் சிரமங்கள் இருந்தால், வரும் நாட்களில் (ஏப்., 8 முதல் 12 தேதி வரை - விடுமுறை தவிர) பள்ளி வேலை நாட்களாக வைத்துக் கொள்ளலாம்.
முன்கூட்டியே மாணவருக்கு தெரிவிக்க தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.