கொட்டுது மழை: இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு விடுமுறை?

UPDATED : நவ 13, 2024 12:00 AM
ADDED : நவ 13, 2024 09:01 AM

சென்னை:
கனமழை காரணமாக 2 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும், கடலூரில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு பகுதியால், 12 மாவட்டங்களில், இன்று கனமழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், கனமழை பெய்து வருவதன் காரணமாக, மயிலாடுதுறை, காரைக்கால் மாவட்டங்களில் உள்ள, அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவித்து, அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
அரியலூர், பெரம்பலூர், கடலூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் 13.6 செ.மீ., மழையும், கொள்ளிடத்தில் 13.4 செ.மீ., மழையும், புதுச்சேரியில், 11.7 செ.மீ மழையும் பெய்துள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.