கைத்தறி பொருள் ஏற்றுமதியும் புதிய உச்சம்

UPDATED : ஏப் 27, 2024 12:00 AM
ADDED : ஏப் 27, 2024 10:18 AM

திருப்பூர்:
உள்நாட்டு ஜவுளி வர்த்தகத்தில் சுணக்கம் ஏற்பட்டதால், வர்த்தகர்கள், பருத்தி நுால், துணி மற்றும் கைத்தறி ஜவுளி பொருட்கள் ஏற்றுமதியில் கூடுதல் கவனம் செலுத்தினர். இறுதியாக, ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் சரிவில் இருந்து மீட்டெடுக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், பருத்தி நுால், துணி மற்றும் கைத்தறி ஜவுளி பொருட்கள் ஏற்றுமதி வழக்கம் போல் சுறுசுறுப்பாக நடந்துள்ளது. கடந்த (2022 - 23) நிதியண்டில், இவற்றின் ஏற்றுமதி, 87 ஆயிரத்து, 774 கோடி ரூபாயாக இருந்தது. இது, கடந்த நிதியாண்டில், 96 ஆயிரத்து, 724 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
செயற்கை நுாலிழை மற்றும் துணிகள் ஏற்றுமதியில் சிறிய சரிவு ஏற்பட்டது. கடந்த 2022-23ல், 39 ஆயிரத்து, 723 கோடி ரூபாயாக இருந்தது, கடந்த நிதியாண்டில், 38 ஆயிரத்து, 736 கோடியாக குறைந்துவிட்டது.
நமது நாட்டில் உற்பத்தியாகும் பஞ்சு, பருத்தி நுாலிழை, துணிகளுக்கு வெளிநாடுகளில் வரவேற்பு அதிகம் என்பதால், ஜவுளி தொழில் மந்தமாக இருந்த போதிலும், ஏற்றுமதி அதிகம் நடந்துள்ளது.
இதுகுறித்து ஏற்றுமதி வர்த்தகர்கள் கூறியதாவது:
முந்தைய நிதியாண்டில், 11 ஆயிரத்து, 506 கோடியாக இருந்த பஞ்சு மற்றும் கழிவு பஞ்சு இறக்குமதி, கடந்தாண்டில் (2022-23), 4,946 கோடி ரூபாயாக சரிந்துவிட்டது. இதேபோல், நுால் மற்றும் துணி இறக்குமதியும், 21 ஆயிரத்து, 011 கோடியாக இருந்தது, 18 ஆயிரத்து, 862 கோடி ரூபாயாக குறைந்துவிட்டது. நடப்பு நிதியாண்டில் இருந்து ஒட்டுமொத்த ஜவுளித்தொழிலும் இயல்பு நிலைக்கு திரும்ப வாய்ப்புள்ளது.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.