நீட் பயிற்சிக்கு அனுமதி சிறப்பு வகுப்புக்கு தடை

UPDATED : ஏப் 26, 2024 12:00 AM
ADDED : ஏப் 26, 2024 10:04 AM
சென்னை:
கோடை விடுமுறையில், பள்ளிகளில் நீட் பயிற்சி வகுப்புகளை நடத்த, பள்ளிக்கல்வித்துறை அனுமதி அளித்துள்ளது. மற்ற சிறப்பு வகுப்புகள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு பாடத்திட்டத்தில், 10, பிளஸ் 1, பிளஸ் 2 ஆகிய வகுப்புகளுக்கு, ஏற்கனவே பொது தேர்வுகள் முடிந்து விட்டன. ஒன்று முதல், 3ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும், ஆண்டு இறுதி தேர்வுகள் முடிந்து விட்டன. 4 முதல், 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பாக்கி இருந்த இரு தேர்வுகளும் முடிந்தன.
இதைத் தொடர்ந்து, ஜூன் முதல் வாரம் வரை, மாணவர்களுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த விடுமுறையில், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்புக்களை நடத்த தடையில்லை; மற்ற சிறப்பு வகுப்புகளை நடத்தக் கூடாது என, பள்ளிக் கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.